Puttalam Online
historical-notes

12.கங்காணிக் குளம்

  • 4 May 2017
  • 520 views

இது  கங்காணிக் குளம் வீதிக்கும், குருநாகல் வீதிக்கும், போல்ஸ் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது.இக்குளத்தின் பெயரைக் கொண்டே இப்பகுதியின் பிரதேசம் கங்காணிக் குளம் வாடி என அழைக்கப்பட்டது.அருகில் அமைந்திருக்கும் வீதிக்கும், பள்ளிவாசலுக்கும் இக்குளத்தின் பெயரையே பாவிக்கப்படுகிறது.

உப்பு வியாபாரத்தை கண்காணிக்கும் முதல்வர் பரம்பரையின் ஒருவரினாலே இக்குளம் அமைக்கப்பட்டதால் கங்காணிக் குளம் எனப்பெயர் பெற்றது.

நெடுங்குளம் பகுதியிலிருந்து வழிந்து வரும் ஏராளமான நீர் ஒரே முறையில் கடலுக்குச் செல்லாது இக்குளத்தில் சேமிக்கப்பட்டு கிரமமாக கடலுக்குள் சென்றது.இக்குளத்திலிருந்து கடலுக்கு நீர் செல்வதற்காக கால்வாய் ஒன்றும் அமைக்கப்பட்டது.அக்கால்வாய் “ரேகடி அளை ” எனப்பட்டது.ரேகு என்பது சுங்க கண்காணிப்பு நிலையமாகும்.முன்பு ரேகு இருந்த இடத்துக்கண்மையில் இக்கால்வாய் கடலுள் விழுந்ததனால் ரேகடி கால்வாய் என்ற பெயரைப் பெற்றது.

நீரோட்டங்களினால் நாளடைவில் இக்குளம் தூர்ந்து ஆலமற்றுப் போன பின் கோடைக் காலங்களில் தரவையாகக் காட்சியளித்தது.அத்துடன் இங்கு வரும் நீரின் அளவும் மிகவும் குறைந்து போயிற்று.மக்கள் இதனை கங்காணிக்குளத்தரவை என அழைத்தனர்.புத்தளத்தின் நீண்ட பாரம்பரியமான வரலாற்றுப் புகழ் பெற்ற பெருநாள் பந்தய நிகழ்த்ச்சிகள் சமீப காலம் வரை நடந்துவந்துள்ளன.அக்காணியிலேயே இப்னு பதூத்தா மணிமண்டபமும், சூழ வர கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All