Puttalam Online
historical-notes

13.பெரிய வண்ணான் குளம்

  • 4 May 2017
  • 472 views

இது மன்னார் வீதியில் இஸ்லாஹிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்குப் பின் புறத்தில் அமைந்துள்ளது.வண்ணார்கள் ஊர் மக்களின் உடுபுடைவைகளை இக்குளத்தில் சலவை செய்யப் பாவித்த காரணத்தினால் இது வண்ணான் குளம் எனப்பட்டது.இதற்கு மேற்கே இக்குளத்தை விட சிறியதாக இன்னொரு வண்ணான் குளம் இருந்தமையினால் இதை பெரிய வண்ணான் குளம் என அழைத்தனர்.

 

அன்று இக்குளம் நகரக்குடியிருப்புக்களுக்குத் தொலைவில் அமைந்து அக்குளத்தைச் சுற்றிவர வண்ணாரக் குடியிருப்புக்களும் இருந்தன.ஆயினும் இன்று இக்குளம் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இருப்பதைப் பார்க்கிறோம்.

 

இக்குளம் கிரமமாக சுத்தமாக்கப்படாமையினாலும்,காலாகாலமாக தங்கியிருக்கும் அசுத்த நீர் வெளியேற்றப்படாமையினாலும் உடுபுடைவைகளை சுத்தமாக்குவதற்குக் கூட தகுதியற்றதாக மாறி வருகிறது.ஒரு சில வண்ணார் வீடுகளே சுற்றியுள்ளன.சில வண்ணார்களே இக்குளத்தைப் பாவிக்கின்றனர்.

 

இன்று சலவை செய்து கொள்வதற்கு  வசதியாக சலவைத்தூள்களும்,சோப்புகளும்,சலவை இயந்திரங்களும்,உடைஅழுத்திக் கருவிகளும் கிடைத்திருப்பதனால் மக்கள் தமது உடுபிடைவைகளை வண்ணார் மார்களிடம் கொடுத்து வெளுப்பது குறைந்துள்ளது.வண்ணார் புடைவை மூடைகளைத் தோளில் சுமந்து  வீடுவீடாக செல்லும் காட்சி இப்போது அதிகமில்லை.வண்ணார்களும் காலத்துக்கேற்ப “லோண்றி ” என்ற பெயரில் சலவைக் கடைகளை கடைத்தெருக்களில் நிறுவி தங்களின் தொழிலைச் செய்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All