Puttalam Online
international-affairs

ஜனாதிபதி ட்ரம்ப்பின் புதிய உலக ஒழுங்கு – லத்தீப் பாரூக்

  • 4 May 2017
  • 857 views

அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் முஸ்லிம்களையும் அவற்றை போதிக்கும் அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தியும் முஸ்லிம் நாடுகள் மீது ஈவு இரக்னமின்றி குண்டுகளை வீசியும் வரலாற்றில் மத்திய காலப்பகுதியில் இருந்தது போல காட்டுமிராண்டித்தனமான இனப் படுகொலைகளையும் அரங்கேற்றி முஸ்லிம்களை கொன்று குவிப்பதுதான் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் புதிய உலக ஒழுங்காகும்.

அமெரிக்கா இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு தலைமை தாங்குகின்றது. இஸ்ரேல் பிரிட்டன் பிரான்ஸ் ரஷ்யா என்பன வரலாற்றில் இதற்கு முன்னர் அறியப்படாத இந்த மோசமான சிலுவை யுத்தத்தின் பங்காளிகளாக இருக்கின்றன.

ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் காணப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய பிரசாரம் மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்ட ஒரு நகர்வாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் இது மேற்கொள்ளப்படுகின்றது. உலகை தவறாக வழிநடத்தும் ஒரு போர்வையே இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாகும். இதன் பிரதான இலக்கு முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்துவதும் அவற்றின் விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும் ஆகும். அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சக்தி மிக்க யூத சதிகாரக் கும்பல்கள் இந்தப் பொய்யை மலிவாக விற்பனை செய்துள்ளன. அங்குள்ள மக்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும் இந்த நிலை பரவலாகக் காணப்படுகின்றது.

மேற்குலகம் முழுவதும் இந்த அச்ச நிலை வியாபித்துக் காணப்படுகின்றது. சிரியா சோமாலியா ஈராக் என பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட நிலைமைகளும் அதன் விளைவாக அந்த நாடுகளின் மக்கள் பாதுகாப்பிற்காக ஐரோப்பா நோக்கி ஓடத் தொடங்கியதும் இந்தப் பொய்களை விற்பனை செய்வதற்கு சாதகமாக அமைந்தன. இதன் விளைவாக பலர் கிறிஸ்தவ மதத்திற்கு பலவந்தமாக மாற்றப்பட்டனர். பாதுகாப்புக்காக ஐரோப்பா நோக்கி ஓடியவர்களுக்கு மேலைத்தேய விழுமியங்கனை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்ற தெரிவுதான் முன்வைக்கப்பட்டது.

மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் கொந்தளிப்பான நிலையும் ஸ்திரமற்ற தன்மையும் உருவாக்கப்பட்டது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எஜமானர்களுக்கு சாமரம் வீசும் மத்திய கிழக்கின் ஆட்சியாளர்கள் தமது மக்களை நசுக்குவதற்கு தேவையான பக்கபலமாகவும் அமைந்தனர்.

இஸ்ரேலின் முதலாவது பிரதம மந்திரி ஒரு தடவை கூறிய கூற்று இங்கே நினைவூட்டத்தக்கது. சிரியா ஈராக் எகிப்து ஆகிய மூன்று நாடுகளையும் பலவீனப்படுத்தினால்தான் இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முடியும் என்று கூறினார்.

syria 3

இந்தக் கூற்றை அவர் கூறி 70 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இன்று உலகில் நடந்திருப்பது அதுதான். சிரியாவும் ஈராக்கும் அழிக்கப்பட்டதோடு மட்டுமன்றி வரலாற்றின் மத்திய காலத்திற்கு அந்த நாடுகள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளன. இங்கு மில்லியன் கணக்காண முஸ்லிம்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைப் படலம் இன்னமும் தொடருகின்றது. இவற்றுக்கு அப்பால் இன்னும் எண்ணிக்கையற்ற் பலருக்கு என்ன நடந்ததென்பதே தெரியாது. எகிப்தில் 61 வருடங்களின் பின்னர் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. இஸ்ரேல் சவூதி அரேபியா ஐக்கிய அரபு இராச்சியம் குவைட் என்பனவற்றின் ஆதரவோடுதான் இந்த சதித் திட்டம் அமுல் செய்யப்பட்டது. இந்த நாடுகள் இணைந்து யூதர்களின் தேவைக்காக அவர்களின் கையாளான அப்துல் பதாஹ் அல் சிசியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவும் எகிப்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசை கவிழ்ப்பதற்காகவும் செலவிட்ப்பட்ட தொகை 11 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதும் பனிப்போர் முடிந்து விட்டது என்றும் உலகில் அமைதி நிலவும் என்றும் இனிமேல் யுத்தங்கள் இடம்பெறாது என்றும் உலக மக்கள் கண்ட கனவு இன்று கலைந்து போய்விட்டது.

மேற்குலகில் இதுவரை இடம்பெற்ற அனைத்து யுத்தங்களுக்கும் கொலைகளுக்கும் பின்னால் இருந்தவர்கள் யூதர்கள். ஆவர்கள் பாரிய இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்டவர்கள். இதனால் உலகில் சமாதானத்தை விரும்பும் மக்கள் ஏமாற்றம் கண்டுள்ளனர். அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய யுத்த வெறியர்கள் முதலில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பொஸ்னியாவின் மீது தமது கவனத்தை செலுத்தினர்.

இங்கு அவர்களின் கொலைப்படலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. இலட்சக்கணக்காண முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு முஸ்லிமும் கொல்லப்படுவதற்கு முன் மிக மோசமான காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்தனர். இந்தக் கொடுமைகளில் மிகவும் கேவலமானது 10000க்கும் மேற்பட்ட பொஸ்னிய முஸ்லிம்கள் ஸிரப்ரெனிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்த பின் அங்கு வைத்தே கொல்லப்பட்டமையாகும்.

இதே காலப்பகுதியில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி குவைத் சர்ச்சையை உருவாக்கி முழு உலகின் கவனத்தையும் வளைகுடா பிராந்தியத்தின் பக்கம் திசை திருப்பினார். இங்கு ஆயிரக்கணக்கான ஈராக்கியப் படை வீரர்களை சர்வசாதாரணமாக புஷ் கொன்று தீர்த்தார். இந்த யுத்தத்திற்கு சவூதி அரேபியாவில் மையம் கொண்டுள்ள பலங்குடி பிற்போக்கு வாத அரசு 55 பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்காவிற்கு தாரை வார்த்துக் கொடுத்தது. இந்த யுத்தத்தின் ஒரே நோக்கம் கடுமையான போராட்ட குணம் கொண்ட ஈராக்கிய யுத்த இயந்திரத்தை நசுக்க வேண்டும் என்பதே. அதுவும் இஸ்ரேலின் தேவைக்காக செய்யப்பட்ட ஒரு காரியமே.

அதனைத் தொடர்ந்து அரபு வசந்த போராட்டம் ஆரம்பமானது. அரபு நாட்டு மக்கள் தமது சர்வாதிகார ஆட்சியாளர்களிடமிருந்து ஓரளவாவது சுதந்திரம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு மிகவும் சமாதானமான முறையில் இந்தப் போராட்டத்தை தொடங்கினர். ஆனால் மேற்குலக யுத்த வெறியர்கள் அதையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர். தம்மால் பயிற்றுவிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்ட கூலிப்படைகளை இந்த அமைதிப் போராட்டத்திற்குள் ஊடுறுவச் செய்தனர். இதனால் அரபு வசந்தப் போராட்டம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான யுத்தமாக மாறியது. இதில் சோமாலியா நாசமாக்கப்பட்டது. ஈராக் லிபியா சிரியா என்பன நாசத்தையும் அழிவையும நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா பிரிட்டன் ரஷ்யா இஸ்ரேல் என்பன இணைந்து மேற்கொள்ளும் இந்த ஒவ்வொரு நாசகார செயற்பாடுகளுக்குப் பின்னாலும் யுத்தக் குற்றங்களுக்குப் பின்னாலும் சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்களின் அமோக பங்களிப்பு காணப்படுகின்றது.

இந்தத் தொடரில் கடைசியாக அமைவது உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றான வறுமையால் பாதிக்கபபட்ட யெமன் மீது சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் ஆக்கிரமிப்பாகும். யெமனிலுள்ள முஸ்லிம்களை கொன்று குவிப்பதற்கு அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான ஹிலாரி கிளின்டன் 36 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்களை சவூதி

refugee2

அரேபியாவிற்கு வழங்கினார். இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி சவூதி அரேபியா இதுவரை 15000க்கும் மேற்பட்ட அப்பாவி யெமன் மக்களையும் சிறுவர்களையும் கொன்று குவித்துள்ளது. இந்த சவூதி அரேபிய ஆட்சியாளர்கள்தான் மக்கா மதீனா ஆகிய புனிதப் பள்ளிவாசல்களின் காவலர்கள் என்றும் தங்களைக் கூறிக் கொள்கின்றனர்.

சவூதி அரேபியாவின் சர்வாதிகார ஆட்சியாளர்களை புனிதப் பள்ளிவாசல்களின் காவலர்களாக ஏற்றுக் கொளவதும் முஸ்லிம்களுக்கு வரலாற்று ரீதியான மாபெரும் வெட்கக்கேடாகும். ஆனால் துரதஷ்டவசமாக இன்று அதுதான் நடந்து வருகின்றது. சவூதி அரேபியாவினதும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளினதும் ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்துவதும் கவிழ்ப்பதும் தீர்மானிக்கப்படுவது வொஷிங்டன,; லண்டன், டெல்அவிவ் பாரிஸ் மற்றும் மொஸ்கோ ஆகிய நகரங்களிலிருந்தே.

இன்று மத்திய கிழக்கு முழுவதும் குழம்பிப் போன நிலையில் உள்ளது. இவ்வாறான பின்னணியில்தான் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் செரின் நச்சு வாயு மூலம் சிரியாவில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மனிதனால் செய்யப்பட்ட இந்த இரசாயன ஆயுதமானது மிகவும் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. சிரியாவின் இத்லிப் பிராந்தியத்தில் நுர்ற்றுக்கணக்காணவர்களை கொல்வதற்கு இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது கற்பனைக்கு அப்பாற்பட்ட கொடூரமாகும் இந்த சம்பவத்திற்காக டொனால்ட் ட்ரம்ப் சிரியாவின் கசாப்புக்கடைக்காரர் பஷர் அல் அசாத் மீது குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் சிரியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்படியானால் அது எப்படி மீண்டும் இங்கே வந்தது.

இதை சாட்டாக வைத்துக் கொண்டு சுபாவத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத மனநோயாளியான டொனால்ட் ட்ரம்ப் சிரியாவின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளார். சிரியாவின் விமானப்படைத் தளமொன்றை நோக்கி 690 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை யுத்த வெறியர்களின் கரங்களுக்குள் சிக்கியிருக்கும் ஊடகங்கள் மூடி மறைத்து விட்டன.

இதன் தொடராக மனநோயாளி ட்ரம்ப் குண்டுகளுக்கெல்லாம் தாயென வர்ணிக்கப்படும் குண்டை ஆப்கானிஸ்தானில் பரீட்சித்துப் பார்த்துள்ளார். இதுதான் அமெரிக்காவிடம் இருக்கின்ற அணுவல்லமையற்ற அதி சக்தி வாய்நத அதி நீளமான அதிக எடை கொண்ட குண்டாகும்.

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதி ஒன்றில் ஐளுஐளு தீவிரவாதிகளின் பதுங்கு நிலைகள் மீது இந்தக் குண்டு போடப்பட்டுள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் சவூதி என்பனவற்றின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்டதுதான் இந்த ISIS அமைப்பாகும்.

இவ்வாறான ஒரு குண்டை ஏன் இங்கு பாவித்தார்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. ஆப்கானிஸ்தானிடம் ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான இயற்கை வளங்கள் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. கூட்டாண்மை யுத்த வெறியர்கள் இதை இழக்கத் தயாராக இல்லை.

மிக விசாலமான மத்திய ஆசிய பிராந்தியமான அசர்பைஜான் உஸ்பெகிஸ்தான் கசகிஸ்தான் தஜிகிஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனக்கு கீழ்ப்படிவான சர்வாதிகாரிகளை ஆட்சியாளர்களாக நிலை நிறுத்தியுள்ளார். அந்தப் பிரதேசங்களும் மக்களும் அபிவிருத்தி அடையாமல் அவர்களை அடக்கியாளும் பொறுப்பு இந்த ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த அடக்குமுறைகளை மீறி சில மாற்றங்கள் அங்கு  இடம்பெற்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

சீனாவில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சின்ஜியாங்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்ற முடியாமல் அவர்கள் தடுக்கப்படுகின்றனர். ஊடகங்களில் இந்த தகவல்கள் வெளிவராமல் தடுக்கப்பட்டும் வருகின்றன.

பண்டைய நாகரிகத்துக்கும் இந்து தத்துவங்களுக்கும் புகழ்பூத்த நாடான இந்தியாவில் இந்த தத்துவங்களோடும் பாரம்பரியத்தோடும் எந்தத் தொடர்பும் அற்ற சுளுளு அமைப்பு மற்றும் அதன் ஆதரவு பெற்ற அரசு என்பன முஸ்லிம்களுக்கு எதிரான நவீன கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றன.

2020 அளவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் சிறுபான்மையினரை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக தீவர முஸ்லிம் எதிர்ப்பாளரான யோகி ஆதித்யனாதை பிரதமர் மோடி நியமித்தது முதல் சிறுபான்மையினருக்கு எதிரான  நடவடிக்கைகள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. 2002 பெப்ரவரியில் கோத்ரா இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை அழித்த அதே நரேந்திர மோடிதான் இந்தியாவின் பிரதமராக இந்த நியமனத்தை இன்று வழங்கியுள்ளார்.

மறுபுறத்தில் காஷ்மீரிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக இரத்த ஆறை ஓடவிட்டுள்ளார்.

மியன்மாரிலும் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் துரத்தி துரத்தி கொல்லப்படுவது தொடருகின்றது. இவை இனப்படுகொலைகள் அல்ல என்று ஆங் சோங் சூகி நிராகரித்துள்ள போதிலும் இவை இன ஒழிப்பு நடவடிக்கைகள் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையை அடிப்படையாகக் கொண்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அன்றாடம் வெளிவந்த வண்ணமே உள்ளன.

இந்த உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதுதான் இன்று எழுந்துள்ள முக்கிய கேள்வி…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All