Puttalam Online
health

இணைத்தளங்கள் வெளியிட்டு வருகின்ற உண்மைக்கு புறம்பான செய்தி

  • 8 May 2017
  • 238 views

சுகாதார சேவைக்கு பங்கம் ஏற்படும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் தொடர்பில் சுகாதார துறை அமைச்சு குற்றத்தடுப்பு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. 
 
இரவு வேளையில் இரத்த பரிசோதனைக்காக வருகை தரும் அதிகாரிகள் குழுவொன்று மக்கள் மத்தியில் பரிசோதனை என்ற பேரில் எச்.ஐ.வி., எயிட்ஸ் வைரஸை பரப்பி வருவதாக உண்மைக்கு புறம்பான செய்திகளை சில இணைத்தளங்கள் வெளியிட்டு வருகின்றன. 
 
இதனால் யானைக்கால் போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில,; பொதுச் சேவையை மேற்கொண்டு வரும் பொது சுகாதார அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அறிவிக்கப்படுகிறது. 
 
இரவு வேளையில் இந்த அதிகாரிகளுக்கு வீடுகளுக்கு சென்று இரத்த பரிசோதனையை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய இரத்த பரிசோதனை மூலம் நோய்கள் அடையாளம் காணப்பட்டால், யானைக்கால் நோய்க்கான சிகிச்சைகளை அவர்களது வீடுகளிலேயே வைத்து வழங்குவது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
 
இது நோயாளிகளுக்கு கிடைக்கப் பெற்ற வரபிரசாதமாகும். வீட்டு உரிமையாளரின் பாதுகாப்பு கருதி பொது சுகாதார அதிகாரிகள் தமது சீருடையில் வீடுகளுக்கு செல்லவுள்ளனர். அதேவேளை அவசியம் ஏற்படும் பட்சத்தில் தமது அடையாள அட்டைகளையும் காண்பிப்பர்.
 
இது விடயம் தொடர்பில் பிரதேசத்தின் சுகாதார பனிமனை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளிடமிருந்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். சில ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் விசேட சலுகைகள் மற்றும் வசதிகள் இல்லாமல் போய்விடுகின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உச்சளவில் சேவைகளை வழங்க அர்ப்பணிபுடன் செயற்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
Thanks to News.lk
MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All