Puttalam Online
historical-notes

14. சின்ன வண்ணான் குளம்

  • 16 May 2017
  • 369 views

இரு வண்ணான் குளங்களில் இது சிறியதாக அமைந்துள்ளதால் சிறிய வண்ணான் குளம் எனும் பெயரைப் பெற்றது.இது மேற்குக் கரை உப்பு வாய்க்காலுக்குத் தெற்கே கடற்கரையைச் சார்ந்து வெட்டாளைத் தரவையின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது.

இதன் அயலிலே முன்பு பத்தினியம்மன் கோயிலும் அமைந்திருந்தது.இன்று உடப்பில் வாழும் மக்களின் முன்னோர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.குளத்தைச் சுற்றி வண்ணாரக் குடியிருப்புக்கள் இருந்தனவாயினும், இப்போது வண்ணார்கள் இக்குளத்தில் தொழில் புரிவதில்லை.நெடுங்காலமாக இந்நிலை இருந்து வருகிறது.

இக்குளம் சிறிது சிறிதாக மக்களால் தூர்க்கப்பட்டு குடியிருப்பு நிலமாக மாறி வருவதைக் காண்கிறோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All