Puttalam Online
%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

புரிதல்- குறும் திரைப்படம்- ஒரு மீள்பார்வை

  • 21 May 2017
  • 1,291 views

ஒரு நல்ல குறும் திரைப்படத்துக்கான பண்பாக நான் கருதுவது , ஒற்றை வரியடக்க கருத்தை நேர்த்தியாக பதிவு பண்ணி செல்லுதல் ஆகும்! இழுத்தடிப்புகளோ தேவையற்ற காட்சிகளோ இல்லாமல் சொல்ல வந்ததை நறுக்கென சொல்லி அந்த கருத்தை ஆள் மனதில் பதிய வைத்தலும் ஆகும், அந்த வகையில் அத்திவாரம் சரியாக விழுந்த குறும் திரைப்படம்,

*********************புரிதல்!************************

பொருளாதார ரீதியாக சாதிக்க அவசியமோ அழுத்தமோ இல்லாத ஒரு இயக்குனருக்கு இயற்கையாக வந்து விழும் ஒரு பொறுப்பு உள்ளது, அது சமூக விழிப்புணர்வு, தனி மனித விழுமியம் சார் மற்றும் இன்ன பிற சீர்திருத்த சார் கருத்துகளை எந்தவித ஒளிவும் இன்றி நாசூக்காக சொல்லுதல் மற்றும் இத்யாதி மசாலா விடயங்களை தவிர்த்து நல்ல ஒரு படைப்பை பதிந்து அகல்வதுவே ஆகும்!

Stand and Deliver (1988) இல் முன்வைத்து பின் Dead poets society (1989), Good will hunting(1999) போன்ற திரைப்படங்கள் அழுத்தமாக கூறிச்சென்ற “ஆசிரியர்-மாணவர் புரிந்துணர்வு” மற்றும் அது சூழ கட்டி எழுப்பப்பட வேண்டிய கல்வி கற்பித்தல் முறைமை பற்றியும் அதன் முக்கியத்துவம், அந்த முறைமை பின்பற்றப்படாதவிடத்து ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் linear காட்சி அமைப்பில் சொல்லி சென்றதற்கு படக்குழுவினருக்கு ஒரு சபாஷ்!
இந்த கருத்து மீது அழுத்தம் கொடுக்க தாரே சமீன் பர், சாட்டை போன்ற அண்மைய கால mega reference points இருந்தும் இன்னும் இது போன்ற குறும் திரைப்படங்களின் அவசியம் காலத்தின் தேவை ஆகும்.

மாற்று முறை கல்வியின் அவசியம் இன்று உறுதியாக அறைகூவல் விடப்படும் இந்த நேரத்தில், இருபது வருடங்களுக்கு முன் பயன்படுத்திய உசாத்துணை நூல்கள் இன்று பயன்பாட்டில் இல்லாத காலத்தில் இன்னும் அதே நூறு வருட பழமை வாய்ந்த வகுப்பறை முறை கல்வியில்தான் எம் கற்பித்தல் நுட்பம் தங்கி இருக்கின்றது என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாக இருக்கின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக இருக்கும் இன்றைய உலகில் இன்னும் மாறாத கல்வி முறைமையின் பக்க விளைவுகள் சொல்லில் அடங்காதவை. ஒரு கையின் ஐந்து விரல்களுமே ஒவ்வொரு ரகமாக இருக்க வெவ்வேறு சூழல்களில் இருந்து வெளிப்படும் மாணவர்களின் ரகம் எப்படியெல்லாம் இருக்கும்? அதை புரிந்து செல்லுதல் ஆசிரிய தொழிலின் தர்மம் சார் விடயம் அன்றோ? இது போன்ற கேள்விகள் இன்னும் விடைகள் அற்று தேங்கி நிற்கின்றன. வெறுமனே போட்டி பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் கல்வியில் இருந்து வெளியேறி உலகில் வாழ்வதற்கு தேவையான கல்வியை எந்த சமூகம் வழங்குமோ, அந்த சமூகமே வெற்றி பெரும் சமூகம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மாற்று முறை வகுப்புகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்த மதிப்புக்குரிய என் ஆங்கில ஆசிரியை திருமதி.ரிஸ்கியா(Shadhique Marikar) அவர்களின் கதையையே இந்த திரைப்படம் தாங்கி வருகிறது என்பது ஒன்றும் புதினம் அல்ல, தொடரட்டும் மாற்றம், வாழ்த்துக்கள்!

பாதிக்கப்படும் மாணவனாக நடிக்கும் அந்த இளைஞனின் நடிப்பு பாராட்டுக்கு உரியது. மற்றவர்களின் நடிப்பில் முன்னேற்றம் அவசியம், Gajanantha Sarma இன்னும் அவர்களை வைத்து பிழிய வேண்டும் என்பது என் கருத்து. அது தவிர கருத்து சார் அத்திவாரம் சிறப்பாக விழுந்ததால் ‘சிறப்பு’ மதிப்பீட்டினுள் வருகிறது இந்த ” புரிதல்”.

எனது ‘புரிதலில்’ தவறுகள் இருப்பின் படைப்பாளியே என்னை மன்னியும்!

-அப்ஸல் இப்னு லுக்மான்-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All