Puttalam Online
international-affairs

திருவான்மியூரில் கவிக்கோவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

  • 4 June 2017
  • 662 views

(சிராஜுல்ஹஸன்)

நேற்று (3.6.17) நண்பகல் (லுஹர்) தொழுகைக்குப் பிறகு திருவான்மியூர் நூர் பள்ளிவாசல் மண்ணறையில் கவிக்கோ அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

பள்ளிவாசலிலேயே நடந்த இரங்கல் கூட்டத்தில் மரியாதைக்குரிய ஐயா சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் ஜெயபாஸ்கர், கவிஞர் தன்ராஜ், பாரதி கிருஷ்ணகுமார், கவிஞர் அறிவுமதி,  அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் உரையாற்றினார்கள்.

ஏராளமான எழுத்தாளர்கள், இளம் கவிஞர்கள், பாவலர்கள், பத்திரிகையாளர்கள், சமுதாயப் பிரமுகர்கள் திரளாக இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அனைவரும் கண்களில் நீர் பனிக்க, இதயம் நிறைந்த பிரார்த்தனைகளோடு கவிக்கோ அவர்களை மறுமைப் பயணத்திற்கு வழியனுப்பி வைத்தனர்.

கவிக்கோ அவர்களே….

நீங்கள் விடைபெற்றுவிட்டீர்கள்..

இன்றோ நாளையோ சில ஆண்டுகள் கழித்தோ நாங்களும் உங்களைப் பின்தொடர்ந்து வந்து மறுமையில் சந்திக்கத்தான் இருக்கிறோம்.

உங்கள் கவியரங்கமே எங்களுக்கு சொர்க்கம்தான்..
சொர்க்கத்தில் உங்கள் கவியரங்கைக் கேட்காமல் விடுவோமா?

கேட்போம்…. இன்ஷா அல்லாஹ்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All