Puttalam Online
other-news

தடை எதிரொலி! சவுதிக்குக் கத்தார் பதிலடி

  • 5 June 2017
  • 1,422 views

கத்தார் நாட்டுடனான தூதரக தொடர்புகளைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளதையடுத்து, சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை முதல் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டன.

இந்நிலையில் சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாகக் கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இத்தகவல் கத்தார் ஏர்வேஸின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All