(அனுன்ட விதுளி அபட தூவிளி)
நுரைச்சோலை அனல் மின் நிலையமானது தனது நிர்மானப்பணிகளை 2006.மே மாதம் 11ம் திகதி பல எதிர்ப்புக்களுடன் தொடங்கி 22.மார்ச்.2011ம் திகதி முதல் கட்ட 300 மெகா வாட் மின்சாரத்தை விநியோகிக்கும் முகமாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் இதனை ஆரம்பிக்கும் போது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களால் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை கவலைக்குறியதொரு அம்சமே. அவற்றுள் ஒன்றுதான் புத்தளம் வாழ் மக்களிற்கு வேலைவாய்ப்பு வழங்குதல். சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்யும் இந்நிலையத்தில் சுமார் 40-50 பேர்களே புத்தளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
மேலும் (அனுன்ட விதுளி அபட தூவிளி) என்ற வாசகத்திற்கு ஒப்பாக இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இலங்கையின் பல பகுதிகளிற்கும் விநியோகிக்கப்பட்டு வரும் அதே வேலை அதனுடைய காரீய தூசுகள் சூழலை மாசுபெறச்செய்வதை பிரதேச வாழ் மக்களாள் சகித்துக்கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வனல் மின் நிலையத்தை சூழவுள்ள சுமார் 3 கி.மீ இற்கு உற்படுகின்ற மாம்புரி, நரக்கள்ளி,நாவட்காடு, பனையடி, பூலாச்சேனை, நுரைச்சோலை, கொய்யாவாடி, ஆலங்குடா, ஆண்டாங்கன்னி போன்ற பல ஊர்களின் விவசாய நிலங்கள் மற்றும் விவசாய உற்பத்தி பாதிப்படைந்துள்ள நிலையில் அன்மையில் ஏற்பட்டுள்ள வேகமான காற்றின் காரணமாக அங்குள்ள தூசுகள் வளிமண்டலத்தில் கலந்து குழந்தைகளின் சுவாசத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் பூலாச்சேனையில் இயங்கிவரும் பூலாச்சேனை அபிவிருத்தி சங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இம்முறைப்பாடு தொடர்பாக பூலாச்சேனை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தலைமையில் ஒரு குழு நுரைச்சோலை அனல்மின்நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடாத்திய போதும் எந்தவொரு தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்பது பூலாச்சேனை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளாகும்.
Thanks-Poolachenai Development Foundation
IKN