Puttalam Online
other-news

கத்தார் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் நான் நன்கு அறிவேன்’ அர்துகான்

  • 10 June 2017
  • 576 views

அரேபிய வளைகுடா நாடுகளிடமிருந்து கத்தார் தனிமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கத்தாருக்கு ஆதரவாக துருக்கி தனது படைகளை அனுப்ப உள்ளதாகத்  தகவலகள் வெளியாகியுள்ளன.

சவுதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்துள்ளன. வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க முடிவெடுத்துள்ளது துருக்கி. துருக்கி தனது ராணுவப் படைகளையும், உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றித் தர முன்வந்துள்ளது. முன்னதாகக் கடந்த 2014-ம் ஆண்டு கத்தார் நாட்டில் தன் படைத் தளத்தை நிரந்திரமாக அமைத்தது துருக்கி. தற்போது துருக்கியில் நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கத்தாருக்கு 3,000 பேர் கொண்ட சிறப்புப் படையை அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இத்தகவல்களையொட்டி துருக்கி அதிபர் அர்துகான் கத்தார் விவகாரம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘கத்தார் நாட்டினை அராபிய வளைகுடா நாடுகள் தனிமைப்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பிரச்னைகள் ஒருபோதும் தீரப்போவதில்லை. கத்தார் தீவிரவாதத்துக்குத் துணை செல்கிறது எனக் கூறப்படுவது கவனிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு தான். ஆனால், கத்தார் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் நான் நன்கு அறிவேன்’ எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All