Puttalam Online
international-affairs

தெற்காசியாவில் அதிக குழந்தை பிறப்பு விகிதம் உள்ள நாடு பாகிஸ்தான்

  • 12 June 2017
  • 434 views

பாகிஸ்தானின் மக்கள்தொகை கடந்த 19 ஆண்டுகளில் முதன்முறையாகக் கணக்கிடப்படுகிறது. உலக வங்கி மற்றும் அரசாங்க புள்ளி விவரங்களின்படி,  சராசரியாக ஒரு பெண்ணுக்கு 3 குழந்தைகள் என்ற விகிதம் என்கின்றனர் அதிகாரிகள்.

தெற்காசியாவில் பாகிஸ்தானில் தான்  அதிக குழந்தை பிறப்பு விகிதம் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 60 மில்லியன் பேர் வறுமைக் கோட்டுக்குக்  கீழ் மோசமான சூழலில் வசித்துவருகின்றனர்.

பாகிஸ்தான் சந்திக்கும் இந்த மிகப் பெரிய பிரச்சினை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஐக்கிய நாட்டு  மக்கள்தொகை மன்றம் தெரிவித்து உள்ளது.

“குழந்தைப் பிறப்பு இயற்கையானது. அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்?”  கேட்கிறார் 36 பிள்ளைகளுக்குத் தந்தையான 57 வயது குல்ஸர் கான். இவருக்கு மூன்று மனைவிகள்.

சரியான பொருளாதார சூழல் இல்லை; சமூகப் பாதுகாப்பு இல்லை; எப்படிப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறார்கள்? “கடவுள் காப்பாற்றுவார்” என்பது இவர்களது பதில். பல்கிப் பெருகிவரும் பாகிஸ்தான் மக்கள்தொகைக்கு இவர்களைப் போன்றவர்கள் கணிசமான பங்களிக்கின்றனர்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All