Puttalam Online
regional-news

புத்தளம் “Three Stars Football Club” தாபகத் தந்தையிரில் ஒருவர்

  • 12 June 2017
  • 558 views

Newton Isaac

அடிவானத்தை நோக்கி கீழிறங்கிச் சென்று ஒளி மங்கும் ஒரு சட்சத்திரம் போல “Three Stars Football Club” தாபகத் தந்தையிரில் ஒருவரான இந்த மூத்த உதை பந்தாட்ட வீரர் எஸ்.ஏ.ஸி. அபுல் ஹஸனை நொந்து நலிந்துபோய் கட்டிலில் கிடக்கக் கண்டபோது எனக்குப் பகீரென்றது. பல நாள் முயன்று நேற்று மாலை நோன்பு திறந்து சுமார் ஒரு மணித்தியாளத்தின் பின்னர் அவரது மகனின் வீட்டில் போய் பார்க்கக் கிடைத்து. கட்டிலில் அவர் சாய்ந்து கிடந்த கோலத்தைப் பார்த்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்று முதலில் எனக்கு சந்தேகம் வந்தது. ஆனாலும் அவர் அருகில் அமரந்து பேச்சைத் தொடங்கியபோது சிரமத்துக்கு மத்தியிலும் நினைவுச் சிதறல்களை ஒன்று திரட்டிச் வெளியிடுவதைப் பார்த்தபோது கொஞம் நம்பிக்கை வந்தது.

மர்ஹும்களான ரஸீன் மஹ்ரூப் ஆசிரியர், அவர் சகோதர்களான மர்ஹும் சலீம் அஷரப்f , பாருக் சமத், காஸிம் மரிக்கார் , ஆங்கில ஆசிரியர் அபுல் ஹஸன் (செட்டி அபுல் ஹஸன் என அடையாளப்படுத்தப்படும்) உட்பட இன்னும் பலரோடு சோர்ந்து 1954 ஆம் ஆண்டில் மர்ஹுமா ராணியா டீச்சரின் வீட்டில் வைத்து Three Stars ஐ உருவாக்கிய வரலாற்றை நினைவுபடுத்தி, இடைவெளி விட்டு. இடை வெளி விட்டு ஒவ்வொரு வார்தையாக மனுஷன் நினைவுபடுத்துகிறார்.

இலங்கைத் திருநாடு சுதந்திரம் அடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இந்த முழுப் புத்தளமும் உதைபந்தாட்ட வாசனையை அறியாத நாட்களில் இந்த அந்த நாள் இளைஞர்கள் Three Stars உருவாக்கியுள்ளார்கள். கேரளாவைச் சேர்ந்த அந்துரூ என்ற உதைபந்தாட்டக்கார் இவர்களுக்கு வழிகாட்டியாகவும், அனுசரயைாளராகவும் இருந்து வழி நடாத்திய நாட்களை நினைவுகூருகிறார்.

நன்மதிப்புப் பெற்ற ஆரிசியர் ரஸீன் மஹ்ரூப் , அவரின் சகோதரர்களான பாரூக் சமத், சலீம் அஷரப்f ஆகியோரை அடிப்படையாக வைத்துத்தான் இந்த “Three Stars” என்ற பெயர் வைக்கப்பட்டதாக பலரும் நம்புகிறார்கள். அந்த கழகம் மர்ஹுமா ராணியா டீச்சர் வீட்டில் வைத்து அமைக்கப்பட்டது என்ற தகவலை வைத்துப் பார்க்கும்போது அந்தத் தகவல் சரியாக இருக்கக் கூடும். ஆனால் அது பற்றி நான் அபுல் ஹஸன் அவர்களிடம் கேட்டபோது அந்த கேரள அந்துரூதான் அந்தப் பெயரைத் தெரிவு செய்தார் என்று மட்டும் சொல்லி வைத்தார். எது எவ்வாறாக இருந்தாலும் இந்த புத்தளம் மண் கண்ட முதல் முதல் உதை பந்தாட்டக் கழகம் Three Star என்பதும் இரண்டு தலை முறைகளைக் கடந்த பின்னரும் அது இந்த மண்ணில் நிலைத்து நிற்கிறது என்ற தகவல் பெருமை தருகிறது. Three Star கடல் கடந்து போய் பெங்ளுரில் ஆடிய ஆட்டத்தை கோடிட்டுக் காட்ட வேண்டும். இது பற்றி அபுல் ஹஸன் அவர்களிடம் கேட்டபோது ”Very interesting match…….” என்று சொன்னார்.

முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை அவர்கள் புத்தளம் மன்னார் வீதியில் மீ-ஓயா ஆற்றுக்கு மேல் அமைக்கப்படவிருந்த ( நாற்பது அடிப் பாலம் என அழைக்கப்படும் பாலம்) பாலத்துக்கு அடிக்கல் நாட்ட வந்திருந்த போது அவரை பிரதம அதிதியாக வைத்து ஆடிய ஒரு உதைபந்தாட்டப் போட்டியை பசுமையாக மனதில் ‌தேக்கி வைத்திருக்கிறார் அபுல் ஹஸன்.

”அந்தப் படம் எங்கோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும். அதை எப்படியாவது தேடித் தருகிறேன் ….” அபுல் ஹஸனின் மூத்த மகன் ஜவாத் வாக்களித்தார். அப்படி ஒரு படம் கிடைக்குமானால்தான் இந்த ஆக்கத்துக்கு மேலும் ஒரு மெருகு ஏற்படும் ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு படத்தைப் அனைவருடனும் பகிரந்து கொள்ளக் கிடைக்காதது ஒரு துரதிஸ்டமேதான். இந்த நொடி வரையில் அது எனது கைக்கு வரவே இல்லை.

மிக நீண்ட காலம் மர்ஹும் ரஸீன் மஹ்ரூப் ஆசிரியர் கழகத்தின் கெப்டனாகவும், தாம் அதன் வைஸ் கெப்படனாகவும் இருந்த இறவா நினைவுளை மீண்டும் தொட்டுக் காட்டும் அபுல் ஹஸன் ” ரஸீன் மஹ்ரூபின் ஆட்டம் எல்லோரையும் மிகவம் கரும்..” எனச் சொல்கிறார். உண்மையும்தான் . உதை பந்தாட்டத்துக்காக தனது பலகலைக் கழகக் கல்வியைக் கோட்டை விட்டவர் மதிப்புக்குரிய ஆசிரியர் ரஸீன் மஹ்ரூப் என பலரும் சொல்லக் கேட்டுள்ளேன்.

அண்மையில் நான் மூத்த பிரசை கஸ்ஸாலி அவர்களைப் பற்றி எழுதியபோது அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் இங்கு மிகப் பொருந்தும் என்பதால் அதை மீண்டும் தொட விரும்புகிறேன்.

நகர மத்தியில் மாவட்ட விளையாட்டரங்கு அமைக்கப்பட்டுவரும் திடல் அந்தக் காலத்தில் நகர சபை உடமையாக இருக்கவில்லையாம். 50 களில் அந்த மைதானத்தை ஒரு பிரபல மத மத்திய நிலையத்தை அமைக்க இரகசியமாக அந்த நாள் பாதுகாப்பு செயலாளர் (ஸ்ரீமா அம்மையாரின் உறவினர்) திட்டம் ஒன்றை வகுத்து புத்தளம் மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்து கடைச் தருணத்தில் விடயத்தை மோப்பம் பிடித்து அந்த இரகசியத் திட்டத்தை அந்தநாள் நகர பிதா மொஹமட் .ஏ. காதர். அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து துரிதமாகச் செயற்பட்டு அப்போதைய அரசாங்க அதிபர் மூலம் அந்த நிலத்தை நகர சபைக்குப் பெற முயன்ற மூவரில் இந்த அபுல் ஹஸனும் ஒருவராவர்.

இவர்களின் பங்களிப்பு அன்று இல்லாது போயிருந்தால் இந்த நகரம் இப்படி ஒரு மவாட்ட விளையாட்டரங்கை கனவில் கூட நினைத்து பார்திருக்க முடியாது. அதற்காக விளையாட்டுத் துறையினர், குறிப்பாக உதைபந்தாட்டத் துறையினர் அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்க வேண்டும்.

விளையாட்டுத் துறைக்கு அப்பால் அபுல் ஹஸன் புத்தளம் நகர சபையின் உறுப்பினராகவும் தனது சமூகப் பங்களிப்பைச் செய்துள்ளார்.

இனிக்க இனிக்க இருந் அந்த நாட்களெல்லாம் ஓடிப் போய்விட்டன. வாடி , வதங்கி நாட்களை எண்ணிக் கொண்டு கட்டிலிந் கிடக்கும் கோலம் தேவனை தருகிறது. அவருக்கு மன அமைதியை இறைவன் நல்ல வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All