Puttalam Online
other-news

கத்தார் மீது அமுல்படுத்தியுள்ள தடை, மரண தண்டனைக்கு ஒப்பானது – அர்துகான்

  • 13 June 2017
  • 413 views

BBC

பல அரபு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிரானது,  மனிதாபிமானமற்றது என்று துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், கத்தார் மீது அமல்படுத்தியுள்ள தடை, மரண தண்டனைக்கு ஒப்பானது என்று எர்துவான் கூறினார்.

கத்தாருக்கு உறுதியான ஆதரவளிக்கும் துருக்கி, பிற நாடுகள் விதித்திருக்கும் தடையின் விளைவுகளை சமாளிப்பதற்காக , விமானம் மூலம் உதவிப்பொருட்களை அனுப்பிவருகிறது.

துருக்கியின் உதவி நடவடிக்கைகளில் இணைந்துள்ள மொராக்கோ அரசும் கத்தாருக்கு விமானம் மூலம் உணவுப்பொருட்களை அனுப்புகிறது.

கத்தாருக்கு அனுப்பப்படும் இந்த உதவி மனிதாபிமான அடிப்படையிலானது என்றும், தீவிரவாதம் தொடர்பாக தோஹா அண்மையில் சந்தித்துவரும் அரசியல் விவகாரத்துடன் தொடர்பில்லாதது என்றும் மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All