Puttalam Online
regional-news

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் சார்பாக நான்கு வீரர்கள் தெரிவு

  • 16 June 2017
  • 106 views

ரூஸி சனூன்  புத்தளம்
சவூதி அரேபியாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ.எப்.சி. கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் தேசிய அணிக்கு புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் சார்பாக முதல் கட்டமாக  நான்கு வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.
தேசிய அணிக்காக வீரர்களை தெரிவு செய்யும் முதலாவது கட்ட தெரிவுகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை (15) காலை கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்றது.
புத்தளம் லீக் சார்பாக இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்த வீரர்களில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணியின் வீரர்களான புத்தளம் லிவர்பூல் அணியினை பிரநிதித்துவப்படுத்தும் எம். முசக்கீர், எம். ஹுஸைர் ஆகியோரும், நியூ ப்ரண்ட்ஸ் அணியினை பிரநிதித்துவப்படுத்தும் ஜே.எம். ஜஹீரும், ஒடிடாஸ் அணியினை பிரநிதித்துவப்படுத்தும் எம். ஹயாமும் தெரிவாகியுள்ளனர்.
புத்தளம் லீக் வீரர்களை அதன் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் அழைத்து சென்றிருந்தார்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All