Puttalam Online
other-news

பொலிசார் மேற்கொண்ட அதிரடி தேடல் நடவடிக்கையில் பலர் கைது

  • 17 June 2017
  • 86 views

நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா பொலிசார் மேற்கொண்ட அதிரடி தேடல் நடவடிக்கையில் தலைமறைவாகியிருக்கும் பயங்கரவாதி ஞானசாரவைத் தவிர பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 2241 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 11,558 பொலிஸ் அதிகரிகள் ஈடுபட்ட 4 மணி நேர தேடல் அதிரடி நடவடிக்கையிலேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 70 பேர், போதைப் பொருள் விவகாரங்களில் தொடர்புள்ள 94 பேர், இரவு வேளைகளில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய 934 பேர், சட்டவிரோத மது பான விவகாரங்களில் தொடர்புள்ள 176 பேரும் இதில் உள்ளடக்கம் என சோனகர்.கொம் செய்திப் பிரவு தகவல் திரட்டியுள்ளது.

நாட்டில் ஞானசார மாத்திரமே பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் மறைந்திருக்கிறார் என நேற்றைய தினம் டிலந்த விதானகே கேள்வி கேட்டிருந்த நிலையில் பொலிசார் இத்திடீர் கைதுகளை மேற்கொண்டிருக்கின்ற அதேவேளை நீதிமன்ற அவமதிப்பு, வழக்குக்கு சமூமளிக்காமை போன்ற காரியங்களால் இலங்கையின் நீதித்துறையை அவமதித்துள்ள ஞானசார தொடர்ந்தும் தலைமறைவாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SONAKAR

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All