Puttalam Online
regional-news

மௌலவி புஹாரி (மன்பஈ)’ — (நளீமீக்களின் ஆசிரியத் தந்தை)

  • 17 June 2017
  • 393 views

Faizur Rahuman

எனும் தலைப்பிடப்பட்ட இந்நூல் புத்தளம் நகரத்தின் (ஸ்பில் றோட்/ வான் வீதி) பூர்வீக மண்ணின் மைந்தர்களில் ஒருவரான உஸ்தாத் மௌலவி ஏ.எம்.சி.எம். புஹாரி (1930 –2008) அவர்களின் “வாழ்வும் சமூகப் பணியும் ” பற்றிப் பேசுகிறது. அன்னார் புத்தளம் சாஹிரா மற்றும் பாத்திமா ஆகிய கல்லூரிகளில் 14 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றினார்கள். இக்காலப் பிரிவில் சாஹிராவின் உப அதிபராகவும் பிற்கூற்றில் கடமை நிறைவேற்றும் அதிபராகவும் சேவையாற்றினார்கள்.

சமூகத்தியாகி மற்றும் ஜாமிஆ நளீமிய்யா ஸ்தாபர் நளீம் ஹாஜியார் அவர்களின் வலுவான அழைப்பினை ஏற்று அரசாங்க உத்தியோகத்தினை இராஜினாமா செய்து ஜாமிஆ நளீமிய்யாவின் தோற்றத்தின் போதே (1973.08.19) தமது 43 ஆவது அகவையில் தன்னை ஜாமிஆவுடன் பிணைத்துக் கொண்டார்கள். பல பொறுப்புகளையும் பதவிகளையம் ஏற்று, சுமார் 25 ஆண்டுகள் ஜாமிஆ நளீமிய்யாவின் மேம்பாட்டுக்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணம் செய்தார்கள்.

உஸ்தாத் எச் .ஐ. ஹைருள் பஷர் (நளீமி) எம்.ஏ. (சூடான்) அவர்கள் எழுதிய ஆக்கமான “நளீமீக்களின் அறிவாளுமைக்கு அடித்தளமிட்ட ஆசான் மர்ஹூம் மெளலவி புகாரி” (இஸ்லாமி சிந்தனை ஓக்டொபர் – டிசம்பர், 2008) மேற்படி எனது கூற்றினை நேர்த்தியாக உறுதிப்படுத்துகிறது.

இப்பகைப் புலத்தில்( 2008.9.25) புனித ரமழான் மாதம் பிறை 24 காலை 6 மணியளவில் புனித சஹாதா கலிமாவை தொடந்தேர்ச்சியாக உச்சரித்துக் கொண்டிருந்த நிலையில் இவ்வுலகில் இருந்து விடைப் பெற்றார்கள். (இன்னாஇலைஹி வயின்னா இலைஹி ராஜிஊன்)

மர்ஹூம் மௌலவி புஹாரி மன்பஈ அவர்கள் எனதருமை தந்தை ஆவார். தந்தையின் வாழ்வும் சமூகப் பணியும் பற்றி பிள்ளைகள் ஆவணப்படுத்தி நூலாக வெளியிடுவது என்பது இலகுவானதன்று. எனெனில் ஆக்கம் அகவயத் தன்மையினால் பாதிக்கப்பட்டு பொழிவிழந்து நகைப்பிற்கிடமாகும் சந்தர்ப்பங்கள் அனேகமுண்டு. ஆயினும் முடிந்தளவு புறவையகமாக இருப்பதற்கு பிரயாசை எடுத்துள்ளேன்.

நூலுக்கு கட்சிதமான அணிந்துரை வழங்கிய ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர், சன்மார்க்கப் பணியாளர் மற்றும் பன்னூலாசிரியர் அறிஞர் உஸ்தாத் ஏ.சி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் பின்வரும் கருத்தினை இதற்கு ஆதாரமாக் காண்கிறேன.

” … எமது மதிப்பிற்குரிய ஆசிரியத் தந்தையின் வாழ்க்கை சரிதையை ஆவணப்படுத்தும் நம் அனைவரது தார்மீகக் கடமையை நம் சார்பில் சிறப்பாக நிறைவேற்றிய எமது ஆசானின் அருமைப் புதல்வர் சகோதரர் எம்.பீ. பைசர் ரகுமான் எமது நன்றிக்குரிபவர். அல்லாஹ் அவருக்கு நிறைவான நற்கூலியை வழங்குவானாக…. “

இந்நூலில் ஆசிரியர் வகிபாகம், பத்தகப் பண்பாட்டின் இன்றியமையாமை மற்றும் அருமைத் தந்தையுடன் இணைந்ததாக எனதனுபங்கள் ஆகியனவற்றின் பின்புலத்திலேயே வடிவமைத்துள்ளேன். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரி மாணவனாக இருந்த போது நூலொன் வெளியிட்டேன். அந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறப்பித்த உப வேந்தர் (Vice Chancellor) பேராசிரியர் கலாநிதி க. குனதாச மற்றும் கலைப் பீடாதிபதி (Dean , Feculty of Arts) பேராசிரியர் கலாநிதி ஆர்.எச். குணவர்த்தன ஆகியோர் ஆற்றிய உரைகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பின்னிணைப்பாக இணைத்துள்ளேன்.

மேற்படி நூலினை தந்தை அவர்களின் பெற்றோர் மற்றும் நளீமிய்ய ஆளுமையும் நிர்வாகத்துறை உதவி பணிப்பாளருமான மர்ஹூம் உஸ்தாத் எச்.ஐ. ஹைருள் பஷர் நளீமி (1957 _ 2017) ஆகியோருக்கு சமரப்பணம் செய்துள்ளேன்.

எனது முயற்சிக்கு முகநூல் நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன். (நூல் பின் அட்டை குறிப்பினை தயவு செய்து வாசிப்பீராக! நன்றி)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All