Puttalam Online
paq-news-bulletin

PAQ அமைப்பின் ஜூன் மாத சேவைகள்

  • 18 June 2017
  • 172 views

(PAQ Media)

1. சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும், தொழில் எதுவும் செய்ய முடியாத வறிய தந்தையின்  10 வயதான மாணவனுக்கு மலவாயில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டபோதும் அவரை அறியாது மலம் வெளியாகின்றமையினால் தொடர்ச்சியாக Diaper பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு முகம்கொடுத்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆறு மாதத்திற்கான Diaper கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி வழங்கப்பட்டது. இதனால் இவர் பெரிதும் பயனடைந்தார்.

2. கூலி தொழில் புரியும் இதய நோயாளியின் வீட்டு நீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும், மலசலகூடம் தூர்வடைந்த நிலையிலும் காணப்பட்டது. இதற்கான நிதியுதவி வழங்கப்பட்டது. இதனால் ஏழு பேர் அடங்கிய அக்குடும்பம் பெரிதும் பயனடைந்தது.

3. வறிய மாணவர்கள் பயிலும் அரபு கல்லூரி மாணவர்களுக்கு நோன்பு துறத்தலுக்கான நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது. இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All