Puttalam Online
regional-news

புத்தளம் நகரில் நந்தி கொடி விற்பனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

  • 18 June 2017
  • 97 views

ரூஸி சனூன்  புத்தளம்.
 
நந்தி கொடி வாரத்தையொட்டி புத்தளம் நகரில் நந்தி கொடி விற்பனை சனிக்கிழமை (17) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை ரீதியாக அற நெறி பாடசாலைகளுக்கு நிதி திரட்டும் முகமாக இந்து சமய கலாசார திணைக்களத்தினால் இந்த நந்தி கொடி விற்பனை வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
புத்தளம் இந்து சமய கலாசார திணைக்கள உத்தியோகத்தர் நிமல ரஞ்சனி தில்லையடி முருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்களுக்கு முதலாவது நந்தி கொடியினை வழங்கி நந்தி கொடி விற்பனையை  ஆரம்பித்து வைத்தார்.
இதனை தொடர்ந்து இந்து சமய கலாசார திணைக்கள உத்தியோகத்தர் நிமல ரஞ்சனி, தில்லையடி முருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள், புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குரு பால கிருஷ்ணன் குருக்கள், புத்தளம் பொம்மக்கன் ஆலயத்தின் பிரதம குரு விஜய குமார் சர்மா உள்ளிட்ட இந்து மத குருமார்கள் இணைந்து புத்தளம் வாழ் இந்து மக்கள் மத்தியில் நந்தி கொடியினை விநியோகம் செய்து வைத்தனர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All