Puttalam Online
regional-news

புத்தளம் தள வைத்தியசாலை இப்தார் நிகழ்வு

  • 18 June 2017
  • 378 views

ரூஸி சனூன்  புத்தளம்.

புத்தளம் தள வைத்தியசாலை நிர்வாகம் வழமை போன்று இம்முறையும் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சனிக்கிழமை (17) மாலை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நகுலநாதனின் வழிகாட்டலில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளரும், புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரியுமான எச்.எம். சபீக் உள்ளிட்ட அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் இணைந்து இந்நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ், காதி நீதவானும், புத்தளம் பதில் நீதவானுமாகிய அப்துல் காதர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், உலமாக்கள், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ரமழான் சிந்தனையை அஷ்ஷெய்க் அன்சாரி வழங்க புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான அஷ்ஷெய்க் எஸ்.ஆர்.எம். முஹுசி அதான் ஒலிக்க செய்தார்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All