Puttalam Online
regional-news

கல்பிட்டி ரஹ்மானியா அரபுக்கல்லூரியில் இஸ்லாமிய போட்டிகள்

  • 18 June 2017
  • 83 views

ரூஸி சனூன்  புத்தளம்.

கல்பிட்டி மற்றும் அதனை சூழ உள்ள பாடசாலை மாணவர்கள், அரபு மத்ரஸாக்களின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையிலான ஒளிக்கீற்று இஸ்லாமிய போட்டிகள் சனிக்கிழமை (17) காலை கல்பிட்டி ரஹ்மானியா அரபுக்கல்லூரியில் இடம்பெற்றது.

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஒளிக்கீற்று இஸ்லாமிய போட்டிகளை கல்பிட்டி ரஹ்மானியா அரபுக்கல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடாத்தி வைத்தனர். புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி) இந்த போட்டிகள் நடைபெறுவதட்கு பூரண வழிகாட்டலை வழங்கி இருந்தார்.
அல் கிராஅத், அதான், சூரா மனனம், கஸீதா, பேச்சு மற்றும் வரலாற்று சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொணடனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் நாளை 20 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இப்தார் நிகழ்வுடன் இடம்பெறவுள்ளது.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All