Puttalam Online
regional-news

புத்தளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மையம் ( safe house ) அமைக்க முயற்சிக்க கூடாதா?

  • 19 June 2017
  • 176 views

Nazliya Cader

தன் குடும்பத்திலேயே வன்முறையைச் சந்திக்கும் பெண்கள் அல்லது சிறுமிகள், தமது பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக தங்கி தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள புத்தளத்தில் ஒரு பாதுகாப்பு மையம் இல்லை.

அண்மைகாலமாக, இதன் தேவை தொடர்பாக பலர் தம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த தற்காலிக தங்குமிடம் தொடர்பாக பல கசப்பான அனுபவங்கள் எமக்கு இருக்கின்ற போதும் இதன் தேவையை குறைத்து மதிப்பிட முடியாதுள்ளது.

இங்கும் அங்குமாக வீடற்றோருக்கு வீடுகள் வழங்குவதற்கு பல அமைப்புக்கள் முயன்று வருகின்றமை எமது காதுகளுக்கும் எட்டியிருக்கும். இவ்வமைப்புக்கள் ஊடாக எமது ஊருக்கோர் பெண்கள் பாதுகாப்பு மையத்தை உருவாக்க நாம் முயற்சிக்க கூடாதா?

ஒரு பாதுகாப்பு மையத்தை அமைப்பது என்பது இலேசான விடயமல்ல. அது பல கோணங்களில் ஆய்ந்து செய்து முடிக்க வேண்டிய பணி.

என் சிற்றறிவிற்கு பட்ட விடயம் என்னவென்றால், இன்று புத்தளத்தில் காணப்படும் பெண்கள் மதுரசா ஒன்றில் இரண்டு தொடக்கம் ஐந்து பேர் தங்க கூடிய வகையில் ஒரு இணைந்த குளியலறையுடன் ஒரு பெரிய அறை கட்டுவது சாத்தியமான வழியாக இருக்கும் என்பது.

ஏற்கனவே, ஒரு நிர்வாக கட்டமைப்பில் இருக்கும் ஒரு பெண்கள் மதுரசாவில் நிர்க்கதியான பெண்கள் சில நாட்கள் தங்குவது பாரிய தாக்கங்களை உருவாக்கப்போவது இல்லை .

அப்படி தங்கியுள்ள பெண்களுக்கு சில நாட்களுக்கு உண்ணுவதற்கும் உடுப்பதற்கும் உதவுவதற்கு எத்தனையோ நல்ல உள்ளங்கள் நம் ஊரில் இருக்கின்றன.

தவிர, இவ்வறையில் பெண்கள் இல்லாத சமயம் மதுரசா தன் தேவைகளுக்கும் இதனை உபயோகிக்கலாம்.

மனமுண்டானால் இடமுண்டு. . ஒரு பாதுகாப்பு ஒதுங்கிடம் இல்லாது அவதியுறும் பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பாகவும் அவர்கள் நம் மார்க்கத்தில் நின்றும் தூர போக இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பதற்கு ஆதாரமாகவும் பல case studies களை உங்களோடு நான் பகிரலாம். ஆனால், அவை இல்லாமலேயே உங்களால் இது தொடர்பான தேவையை உணர முடியும் என்பதால் இப்பதிவின் சுருக்கம் கருதி இத்தோடு நிறுத்துகின்றேன்.

பொது சேவையில் ஆர்வமுள்ள ஆரோக்கியமான இதயங்களுக்கு இது சமர்ப்பணம்.

VAY


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All