Puttalam Online
regional-news

உடப்பு,ஆண்டிமுனை பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்

  • 19 June 2017
  • 131 views

-க.மகாதேவன்-

உடப்பு,ஆண்டிமுனை பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச்

சம்பவத்தில் ஒன்றரைப் பவுன் சங்கிலியும்,முப்பதாயிரம் ரூபாய் பணமும் ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் ஞாயிறு(18)அதிகாலை 2மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது சம்பந்தமாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.மேற்படி சம்பவம் ஶ்ரீகிருஷ்ணா பாடசாலை அதிபர் திரு.க.தொண்டமான் அவர்களின் வீட்டில் இடம்பெற்றதாக அதிபர் குறிப்பிட்டார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,சம்பவ தினம் அதிகாலை தமது வீட்டில் யன்னல் கிறீலை நீக்கி அதனூடாக உள்ளே வந்து தமது வீட்டில் இருந்த பணத்தையும் ,நகையையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமது மனைவி படுத்திருந்ந வேளை கழுத்திலிருந்த தாலிக்கொடியை அறுக்கும் போதே,சத்தமிட்டதையிட்டு கள்வன் தப்பிச்சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அதிஷ்டவசமாக தாலிக்கொடி பறிபோக வில்லை.அத்தோடு வம்பிவட்டான் பகுதியிலும் ஒரு வீட்டிலும்,ஆண்டிமுனையில் மற்றுமொரு வீட்டிலும் மொத்தமாக நான்கு வீட்டிலும்.ஒரு கடையிலும் கள்வன் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமாக முந்தல் பொலிஸில் முறையிட்டதையிட்டு நான்குபேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

vat


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All