Puttalam Online
regional-news

சேஞ்ச் தொண்டு நிறுவனம் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

  • 19 June 2017
  • 201 views

ரூஸி சனூன்  புத்தளம்.
புத்தளம் இரண்டாம் குறுக்குத்தெருவில் இயங்கும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் வருடாந்தம் நடாத்தும் இராப்போசனத்துடன் கூடிய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வுகள் இம்முறையும் திங்கட்கிழமை (19) மாலை புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
சேஞ்ச் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எல். தாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்தா, புத்தளம் பிரதேச செயலாளர், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக் உள்ளிட்ட உலமாக்கள், சமூகத்தொண்டு நிறுவன அங்கத்தவர்கள், சேஞ்ச் தொண்டு நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
VAT
 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All