Puttalam Online
uncategorized

புத்தளம் – ஹிஜ்ரி 1400 மினாரா புதுவடிவம் என்ற பெயரில் இடிக்கப்படப்போகின்றதா?

  • 19 June 2017
  • 175 views

Aadhul Shan Haleem

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு…

முஸ்லிம்கள் வரலாற்று நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த காலத்தில் அது சிதைக்கப்பட்டு புதுவடிவம் கொடுக்கப்படுவதால் ஏற்படும் பாரதூரங்கள் பற்றி அறியாத சில சமூக விஷமிகள் எமது ஊரின் நினைவுச்சின்னமான மினாராவுக்கு புதுவடிவம் கொடுக்கப்போகிறார்களாம்..

புத்தளத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரைக்கார் வீடு, முதலாலி வீடு, மினாரா, பெரியபள்ளி போன்றன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்கள்.

மினாரா சிதுலமடைந்து விட்டதாக அப்பட்டமான ஒரு பொய்யைக்கூறி அதற்கு புது வடிவம் கொடுக்கப்போகிறார்களாம்.

ஏற்கெனவே மரைக்கார் வீட்டை இளந்துவிட்டோம் இன்றும் அதன் வடிவம் எமது மனக்கண்ணில் நீங்கா காட்சியாக இருக்கிறது.

அது இடிக்கப்பட்ட பின்னர் வரும் தலைமுறைக்கு வரலாறு நூமான் ஹோல் லாக மட்டும் தான் பதியப்படும். அங்கே காணப்பட்ட பலிங்குக்கைப்பிடிகள், மரத்திலாலான slab, மொட்டைமாடி, டைல்ஸ், நிலா முற்றம், அந்த காலத்து ஜக்கூசி இவை எல்லாம் பார்த்து அனுபவித்த அங்கே டியுட்டரி சென்ற எமக்குத்தான் தெரியும்..அதை ஒரு museum ஆக மாற்றி இருக்க இன்று அது அன்னிய சலாவனியால் எமது ஊர் பிரயோசனம் அடைந்திருப்பதோடு மாத்திரம் இல்லாமல் புத்தளத்தின் முஸ்லிம்கள் வரலாறு நாட்டின் தட்போதைய சூல்நிலை யில் பதியப்படாத ஆதாரங்களாக காட்சியளிக்கும்.

புணர் நிர்மானம் என்பது வேறு புது வடிவம் கொடுப்பது என்பது வேறு..புணர் நிர்மானத்தை நாம் அனுமதிக்கலாம் ஆனால் புதுவடிவத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

அலிசப்ரி போன்றோரை அரசியலுக்கு கொண்டுவரும் போது பின்னொரு காலத்தில் புத்தளத்தின் வரலாறு வெரும் 10 வருடங்கள் என்ற அளவுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சம் இப்போது புத்தளத்து மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது..

இந்தியாவின் தாஜ்மஹால் புணர்நிர்மானம் செய்யப்படுகிறதா?? புதுவடிவம் கொடுக்கப்படுகிறதா???

இந்தியாவுக்கு ஏன் செல்ல எமது நாட்டின் சிங்கள மக்களின் ஜேதவனாராம, தூபாராம இவைகளை புணர்நிர்மானம் செய்கிறார்களா??? புதுவடிவம் கொடுக்கிறார்களா???ஏன் இவற்றை புதுவடிவம் கொடுக்க சிங்கள அரசியல் வாதிகளிடம் பணம் தான் இல்லையா???

மினாரா ஒரு போதும் சிதுலமடைய வில்லை அவ்வாறு சிதுலமடைந்தாலும் புனர்நிர்மானம் செய்யப்பட வேண்டுமே ஒழிய புதுவடிவம் செய்யக்கூடாது..

நான் தான் கட்டினேன் என பெயர் போட வேண்டுமானால் ஊரின் தேவைப்பாடு ஏராளமாக உள்ளது அதை விட்டு விட்டு வரலாற்றுச்சின்னத்துக்கு புதுவடிவம் கொடுக்கப்போய் ஊரின் வரலாற்றுச்சின்னத்தை அழித்து எமது தனித்துவத்தை தொலைத்து..நாளை புதிதாக முஸ்லிம்களின் சின்னம் ஒன்று கட்டப்படுகிறது என சிங்கள இனவாதிகளை தூண்டி புத்தளத்தில் இல்லாத புத்தர் சிலை ஒன்றை எங்காவது நினைவுச்சின்னமாக நிறுவ வழி வகுக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறோம்..

சோசியல் மீடியாக்களில் சில கூழுக்கு பாடிகள் பிரச்சாரமானது இன்றே புத்தர் சிலைக்கான தகுந்த காரணத்தை சிங்கள சமூகத்து திட்டமிட போதுமானதாக அமையும்…

கே ஏ பாயிஸ் அவர்கள் புத்தளத்துக்கு அலப்பரிய சேவைகள் ஆற்றினார் ஆனால் வரலாற்றுச்சின்னங்களில் கை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

அமைச்சர் ரிஷாத் அவர்களே வரலாற்றுச்சின்னங்களின் அறுமை நீங்கள் வில்பத்து விவகாரத்தில் அனுபவித்தீர்கள்..

அங்கே அமைக்கப்பட்ட பள்ளியின் குறிக்கப்பட்ட ஆண்டு எமது வரலாறு கூறியது..

இதை சரியாக அறிந்த நீங்கள் புத்தளத்து வரலாற்றை அழிக்க ஒரு போதும் துணைபோகக்கூடாது.

புத்தளம் பெரிய பள்ளி மற்றும் சமூக நலன் விரும்பிகள் இந்த முயற்சியை கை விட ஆவன செய்ய வேண்டும் எமது வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும். வஸ்ஸலாம்.

VAT

puttalam minaraputtalam minara


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All