Puttalam Online
other-news

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கடுமையான சூழ்நிலை குறித்து ஐ.நா. வில் விளக்கம்

  • 20 June 2017
  • 100 views

வெளிப்பாடு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான ஐ. நா வுக்கான விஷேட அறிக்கையாளர் திரு டேவிட் கேய் அவர்களை ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில்,  இலங்கை  முஸ்லிம்களுக்கு  எதிராக அண்மைக்காலமாக மேற்றக்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளுக்கு எதிராக பரப்புரைகளை செய்து வரும் சகோதரர் முயிஸ் வஹாப்தீன் அவர்கள்  சந்தித்து இன்றைய கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும்   கடுமையான சூழ்நிலை குறித்து  அவருக்கு விளக்கினார்.

 எதிர்வரும்  அக்டோபர் அல்லது நவம்பர் மாதமளவில் தான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும், இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்து தாம் கூடிய கரிசனை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.



இவரின் விஜயத்தின் போது அண்மைக்கால வன்முறைகளால் தாக்கப்பட்ட  முஸ்லிம் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் தாக்குதலுக்கான பள்ளிகளிகளின் நிர்வாகிகளும் இவரை நேரடியாக சந்தித்து தமது முறைப்பாடுகளை கையளிப்பதத்திற்கான நடவடிக்கை இன்ஷா அல்லாஹ் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All