Puttalam Online
regional-news

வறுமை நிலையில் வாழும் குடும்பத்தினருக்கு இலவசமாக புதிய ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன

  • 20 June 2017
  • 222 views

ரூஸி சனூன்  புத்தளம்.
புத்தளம் நகரில் வதியும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தினர்கள் எதிர்வரும் நோன்புப்பெருநாளை குதூகலமாக கொண்டாடும் தோரணையில், தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமை நிலையில் வாழும் குடும்பத்தினருக்கு இலவசமாக புதிய ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.
புத்தளம் நகரில் ஆன்மீக துறையுடன் சமூக பணிகளிலும் அரும் தொண்டாற்றி வருகின்ற புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் கடந்த வருடங்களை போன்று இம்முறையும் வசதி அற்றவர்களுக்கு இந்த புதிய ஆடைகளை வழங்கி வைத்துள்ளது.
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) அவர்களின் முயற்சியின் பலனாக ஏற்பாடு செய்யப்பட்ட, இந்த புதிய ஆடைகளை வழங்கி வைக்கின்ற நிகழ்வானது திங்கட்கிழமை (19) காலை ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் இஸ்லாமிய கற்கை நிலையத்தில் நடைபெற்றது.
புத்தளம், தில்லையடி மற்றும் பாலாவி போன்ற பிரதேசங்களிருந்து தெரிவு செய்யப்பட்ட 88 குடும்பத்தினருக்கு இதன் போது இந்த புதிய ஆடைகள் வழங்கப்பட்டன.
வறுமை நிலையில் வாழும் இத்தகைய ஏழ்மை குடும்பத்தினர்களுக்கு இந்த புதிய ஆடைகள் வழங்கப்பட்டதன் மூலம் எதிர்வரும் நோன்புப் பெருநாளை அவர்கள் ஓரளவேனும் சந்தோஷமாக கொண்டாடுவதற்கான வழியினை இறைவன் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) தெரிவித்தார்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All