Puttalam Online
art-culture

ஒரு ரியாலின் இன் நிழலில்…

  • 5 July 2017
  • 320 views

ஒரு ரியாலின் இன் நிழலில்…
—————————
(The Poem for PAQ AGM -2017)

இறை அன்பின்
ஈரத்தை எதிர்பார்த்து…

தேசம் கடந்த தோர்
சுஜூதின் சுகம் தேடி…

P-A-Q இன்
பிறந்த நாள் ஒன்றில்…

கத்தார் காற்றில் – இந்த
கவிதை கலக்கிறது…

*
நண்பர்களே..

நெஞ்சில்
கனவுகளோடு கப்பலேறியவர்களே..

பிடுங்கப்பட்ட வேரின் ஈரத்தோடு
இன்னொரு தேசத்தில் இடப்பட்டவர்களே..

பிறந்த மண்ணை மறக்காத
P-A-Q நெஞ்சங்களே..

புத்தளத்தின்
புதல்வர்களே…

அஸ்ஸலாமு அலைக்கும் வ வ

*
நான்
ஊரிலிருந்து வருகிறேன்…

ஊரின்
உள்ளத்திலிருந்து வருகிறேன்…

ஈகைச் செடி வளரும்
உங்கள்
சோலையிலிருந்து வருகிறேன்…

*
வீதிகள்
விசாரித்தன..

பாடசாலைகள்
பாசம் பகிர்ந்தன..

கடைவீதிகள்
கேட்டதாய் கூறின…

மரங்கள்..
மலர் சொரிந்தன..

புத்தளம்
உங்களுக்கு ஸலாம் சொன்னது !

*
ஒரு தாயின் கையில் – நீ
பூவாய் வளர்ந்த மண்

வெள்ளை சீருடையில்..
கல்வியை கண்ட மண்

வெட்டுக்குளத்தில்
பெல்டியடித்த மண்

ஆற்று வெளிகளில்
அயிரை மீன் பிடித்த மண்..

கனவுகள் தந்த மண்..

அது
அழுத வரிகளை
அழைத்துக் கொண்டு வந்தேன் …

*
காடுவெட்டும் தொழிலாளி – தன்
கதையை கொஞ்சம்
சொல்லச் சொன்னான்..

அப்பம் சுடும் அஸீமா தாத்தா .. – அவள்
பிள்ளைக்கொரு
pencil கேட்டாள்..

கல்விக்கு காசின்றி
கடை செல்லும் சிறுவன் – உங்களுக்கோர்
கடிதம் தந்தான்…

குமருகளின்
விசும்பல் சத்தம்..

நோயாளிகளின்..
முனகல் சப்தம்…

உங்களிடம்
மொழி பெயர்க்கச் சொன்னார்கள்…

PAQ எங்கள் சொந்தம் என்றார்கள்..
PAQ எங்கள் தந்தை என்றார்கள்..
PAQ எங்கள் சகோதரன் என்றார்கள்..

PAQ
தேடி வந்து
தோழ் கொடுக்கும் – புத்தளத்தின்
பேரருள் என்றார்கள்.

*

ஒழுகாத கூரை காட்டி
அதிலே – நீங்கள்
உயிரோடு வாழ்வதாய் சொன்னார்கள் ..

கணவனில்லா விதவைகள்..
உங்கள் – காசு வந்து
சேர்ந்த தென்றார்கள்..

மதம் தாண்டி வந்தவர்கள்..
இன்றும் – தாம்
மனநிறைவாய் முஸ்லீம் என்றார்கள்…!

PAQ …
தேடி வந்து
தோள் கொடுக்கும் – புத்தளத்தின்
பேரருள் என்றார்கள்…

*

கொடுப்பவர்களே..

கரங்களால்
நீண்டவர்களே…

ஒரு ஏழையின் கண்ணீருக்கும்
சேர்த்தே உழைப்பவர்களே..

இரும்புப் பட்டறையில் இருமிக்கொண்டே…
ஒரு ரியால் ஐ
நீட்டுபவர்களே…

நண்பர்களே…
PAQ இன் Member களே

உங்கள்
ஸதகாவின் நிழலில் – ஒரு
சமூகம் வாழ்கிறது !

ஒரு Riyal இன் நிழலில்
புத்தளம் புத்துயிர் பெறுகிறது…

*

Al – kor இல் இருந்தவண்ணம்
அல்லாஹ்வை
நினைத்தவர்கள்…

காத்தாரா வை – காணாத
கண்ணில்
புத்தளத்தை வைத்தவர்கள்..

7 நாளும் , வேலை செய்து,
10 ரியால் பகிர்ந்தவர்கள்…

சந்தாவைப் பெற்றுவர
taxi களை
மிதித்தவர்கள்..

சேலியா வின், சென இய்யாவின் வின்
தூசுகளில் உழைத்தவர்கள்

600 ரியால் உழைத்து
அதிலிருந்தும் கொடுத்தவர்கள்…

வியர்வைகள் காயுமுன்னே
கொடுப்பதட்கு நடந்தவர்கள்..

கேட்காத வேளையிலும்
கரம் நீட்டித் தந்தவர்கள்…

அல்லாஹ்வின் மீஸானில்
அழகான செங் கரங்கள்..

உங்கள்
ஸதகாவின் நிழலில் – ஒரு
சமூகம் வாழ்கிறது !

ஒரு Riyal இன் நிழலில்
புத்தளம் புத்துயிர் பெறுகிறது…

*
நண்பர்களே ..
PAQ இன் member களே..

புத்தளத்தின் சிற்ப்பிகளே..

உங்கள் சந்தாக்கள்
ஊரில் இருக்கிறது..

அந்த சில்லறைகள்
சிவந்திருக்கிறது…

ஒரு சிறுமியின்
சிரிப்பில் இருக்கிறது…

ஒரு வீட்டின்
நிம்மதியில் இருக்கிறது…

உங்கள் …
மீஸானில் இருக்கிறது…!

மதுரஸா மாணவர்களின்
மகத்தான
எதிர்காலமாய்…

நெருப்பில் வாழும் ஏழைகளின்
கல்புக் கொரு
வசந்த கீதமாய்…

வலது குறைந்த பிள்ளைகளின்
வாழ்க்கைக் கொரு
வலது கரமாய்…

உடைந்த வீடுகளுக்கு
உயிர்கொடுக்கும் சீமெந்தாய்

மறுமையின் மரமாய்
வளர்கிறது…

உங்கள் சந்தாக்கள்
ஊரில் இருக்கிறது..

அந்த சில்லறைகள்
சிவந்திருக்கிறது…

*
நண்பர்களே…
PAQ இன் Member களே

உங்கள்
ஸதகாவின் நிழலில் – ஒரு
சமூகம் வாழ்கிறது !

ஒரு Riyal இன் நிழலில்
புத்தளம் புத்துயிர் பெறுகிறது…

அதோ…
உங்கள் வியர்வைகள்
விளைந்திருக்கிறது….

அந்த
மீன் வியாபாரியின்
மிதி வண்டி நீங்கள்..

தில்லையடி மாணவனின்
கல்விப் பை
புத்தகம் நீங்கள்…

வெள்ள அனர்த்தத்தில் – உணவுப்
பொதி நீங்கள்…

ஒரு பசித்தவனின்
உணவுத்தட்டில் – சோற்றுப்
பருக்கைகள் நீங்கள்…

அந்த இதய நோயாளியின்
புதிய ரத்தத்தில்
உயிர்த் துளி நீங்கள்…

வைத்திய சாலை
சிறுவர் அரங்கை
வரைந்தவர்கள் நீங்கள்..

அங்கு
பல நூறு மொட்டுகளின்
புன்னகை நீங்கள்…

பால் கொடுத்த
தாய் மாரின்
ஓய்வு நிலம் நீங்கள்…

மனித மகிழ்ச்சியின்
வெளிச்சம் நீங்கள்…!!

உங்கள் வியர்வைகள்
விளைந்திருக்கிறது….

நண்பர்களே ..
PAQ இன் member களே

உங்கள்
ஸதகாவின் நிழலில் – ஒரு
சமூகம் வாழ்கிறது !

ஒரு Riyal இன் நிழலில்
புத்தளம் புத்துயிர் பெறுகிறது…

*
ஊரின் உன்னதமாய் – உங்கள்
உண்டியல்கள் உயர்ந்திருக்கிறது…

நீங்கள் கொடுத்தது…

சர்வத் கரத்தை அல்ல.. – ஒரு
குடும்பத்தின்
சந்தோசம்..

நீங்கள் கொடுத்தது…

வெறும் ஆட்டோ அல்ல
ஒரு உழைப்பாளியின்..
தன்மானம்..

குர்பான் இறைச்சியும்
பித்ரா அரிசியுமல்ல… – அது
ஏழைகளின் பெருநாள்..

நீங்கள் கொடுத்தது…

Hospital சிறார் அரங்கல்ல – அது
நோயாளியின் நிம்மதி..!

மனித நேயத்தின்
கையொப்பம்..

அந்நிய மக்களுக்கு
முஸ்லீமின் முகவரி..

திருமணத்தின் உதவியல்ல – அது
புத்தளத்தின் மானம்..!!

அடுத்த சந்ததிக்குமான
கௌரவம்..!!

ஊரின் உன்னதமாய் – உங்கள்
உண்டியல்கள் உயர்ந்திருக்கிறது…

நண்பர்களே ..
PAQ இன் member களே

உங்கள்
ஸதகாவின் நிழலில் – ஒரு
சமூகம் வாழ்கிறது !

ஒரு ரியாலின் நிழலில்
புத்தளம் புத்துயிர் பெறுகிறது…

*

ஊரின் கல்வியில்..
ஊரின் ஆரோக்கியத்தில்
ஊரின் வறுமை ஒழிப்பில்
ஊரின் இஸ்லாமியப் பணியில்…

உங்கள் ஆயுளும்
அங்கத்துவம் வகிக்கிறது…

*

தொண்டை வறண்ட
வீடுகளுக்கு
தண்ணீர் Pipe தந்தீர்கள்..

புதிய கண்டு பிடிப்பாளனுக்கு
புது ரத்தம்
பாய்ச்சிநீர்கள்..

PCTT – Insight இன் இயங்குகைக்கு
இருகரம்
கொடுத்தீர்கள்…

இல்லாத இளைஞருக்கு
கல்வி தானம்
தந்தீர்கள்…..

கிரீஸ் பேயின்
கொலைக் களத்தில்
தாய்க்கும் – ஒரு தாயாய் ஆனீர்கள்..

வெட்டாளை ஸ்கூலின்
வேலிகளாய்
அமைந்தீர்கள்….

பாத்திமாவின் – ஸாஹிராவின்
சுற்று மதில் ஆனீர்கள்..

மணல் குன்று கல்விக்கும்
கற்களாய் போனீர்கள்…

நிரந்தர தர்மத்தில்
அங்கத்தவன் ஆனீர்கள்…

ஊரின் கல்வியில்..
ஊரின் ஆரோக்கியத்தில்
ஊரின் வறுமை ஒழிப்பில்
ஊரின் இஸ்லாமியப் பணியில்…

உங்கள் ஆயுளும்
அங்கத்துவம் வகிக்கிறது…

*
நண்பர்களே ..
PAQ இன் member களே

உங்கள்
ஸதகாவின் நிழலில் – ஒரு
சமூகம் வாழ்கிறது !

ஒரு Riyal இன் நிழலில்
புத்தளம் புத்துயிர் பெறுகிறது…

புத்தளத்தின் கண்ணீர் – கத்தாரிலே
வீழ்ந்தாலும்..
உங்கள் கைக்குட்டைகள்
நீள்கிண்றன…

வறுமையில் வந்து
வெறுமையில் இருப்பவர்கள்..

சட்டச் சிக்கல்களில்..
சிக்கித் தவிப்பவர்கள்..

ஊர் திரும்ப வழியின்றி
சுவர்களாய் நிட்பவர்கள்..

உங்கள் கரம் பிடித்து
ஆறுதலில் அமர்கிறார்கள்..

புத்தளத்தின் கண்ணீர் – கத்தாரிலே
வீழ்ந்தாலும்..
உங்கள் கைக்குட்டைகள்
நீள்கிண்றன…

*
நண்பர்களே ..
PAQ இன் member களே..

மரணித்தும் வாழவிரும்பும்
புத்தளத்தின் சிற்பிகளே….

இன்னும் பனி செய்ய
ஏராளம் இருக்கிறது…

ஏங்கும் நெஞ்சோடு – ஆத்மாக்கள்
தவிக்கிறது…

மலம் கழிக்க
வழியில்லா
மனிதர்கள் இருக்கிறார்கள்…

மழை பெய்தால்
அழுகின்ற
கூரைக்குள் கிடக்கிறார்கள்…

கட்டிலல்ல,
மெத்தையல்ல,
பாயின்றிப் படுகிறார்கள்..!!

Dengu வளாகத்தில் – நுளம்பின்
தீனியாகத்
தவிக்கிறார்கள்….!!

முதுகு வளைந்த
தங்கைக்கு – முல் நிமிர்த்த
சல்லி இல்லை…

Kidney நின்ற தந்தைக்கு
ரத்தம் மாற்ற
ரொக்கமில்லை…

குடு விழுந்த
குடிசைகளை
நிமிர்த்திவிட சக்தியில்லை..

இன்னும் பனி செய்ய
ஏராளம் இருக்கிறது…

ஏங்கும் நெஞ்சோடு – ஆத்மாக்கள்
தவிக்கிறது…

*
நண்பர்களே…
சொந்த Member களே…

PAQ இன் – இதயத்திலிருந்து
பெய்யும் மழைகளே..

இந்த – ஈகைச்
சூரியனின் இனிய கதிர்களே…

உங்கள் உயிர்ச் சொட்டில்
உரமிடுங்கள் !

PAQ ன் தளத்தை
பலப்படுத்துங்கள்…

விரல்கள் கரமாகி…
கரங்கள் கடலாகி – இந்தக் கடமையை
கட்டிடமாக்குங்கள்..!!

கண்ணீர் துடைக்கும் – உங்கள்
கைக்குட்டைகளை
அகலப்படுத்துங்கள் !!

இல்லாத வேளைகளில் – தன்
சொந்தப் பை திறக்கும் – அந்த
Exco வைப் போல்
எழுந்து நில்லுங்கள்…

கொடுக்கின்ற சுகம்
சுவையுங்கள்..

சொந்த – சந்தாக்களை
1 cm ஏனும் உயர்த்துங்கள்…

அடுத்தவருக்கு அறிமுகம்
அந்த
இபாதத்தைச் செய்யுங்கள்..

உயிர் வாழுங்கள்…

முகம் தெரியா
மனிதர்களின்
மூச்சுக் காற்றில் வாழுங்கள்..

*
கொடுங்கள்..

உயிருள்ள துஆக்கள்
உங்களுக்காய் முளைக்கும்…

ஆனந்தக் கண்ணீர்கள்
உங்கள் ஜனாஸாவை நனைக்கும் ..

கண் கானா
மனிதர்களின் – கல்புகளில்
இடம் கிடைக்கும்..

விலை உயர்ந்த
துஆக்களில் – உங்கள் பெயர் இருக்கும்..

மஹ்ஷரின்
மதில்களில் – வலப்புறம் இடம் கிடைக்கும்..

உயிர் வாழ்வீர்கள்..
புத்தளத்தின் சிற்பிகளாய்

மரணித்தும் வாழ்வீர்கள்..

*

குடும்பம் தாண்டி உழைத்த – உங்கள்
கரங்கள் முத்தமிடப்படும்…

அடுத்தவன் கஸ்டம் உணர்ந்த
உங்கள் – கல்புகள்
காதலிக்கப்படும்..

லட்சங்கள் தாண்டி நீண்ட..
உங்கள்
லட்சியங்கள் நேசிக்கப்படும்…

அல்லாஹ்வின் சந்நிதியில்
உங்கள் ஆத்மா கெளரவிக்கப்படும் !!!

உயிர் வாழ்வீர்கள்..

ஊரின் முகடுகளில்,
ஊரின் வரலாற்றில்..
புத்தளத்தில் பக்கங்களில்…

உயிர் வாழ்வீர்கள்..
புத்தளத்தின் சிற்பிகளாய்

மரணித்தும் வாழ்வீர்கள்..

*
பாதம்
பலம் பெறட்டும்..

பயணம் தொடரட்டும்…

PAQ இன்
ஆயுள் நீளட்டும்…

*
Br . Marikkar
Kingdom of Bahrain
13-04-2017


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All