Puttalam Online
regional-news

புத்தளம் பாத்திமாவுக்காக 27 வருடங்கள் நீதி மன்றம் ஏறி இறங்க வேண்டிய நிலை

  • 28 July 2017
  • 853 views

Newton Isaac

தள்ளாத எண்பத்தைந்து வயது, நாற்பத்தி இரண்டு ஆண்டு கால ஆசிரியர் சேவை ஓய்வு பெற்ற பின்னர் கைக்கு வரும் ஓய்வூதியத்துடனும், மனைவி மக்கள் பேரப் பிள்ளைகளுடனும் அமைதியாக இருக்க வேண்டிய காலத்தில் இந்த மூத்த ஆங்கில ஆசிரயருக்கு நீதி மன்றம் ஏறி இறங்க வேண்டிய நிலை. அதுவும் கடந்த இருபத்தேழு வருடங்களாக என்றால் அதைப்போல ஒரு வேதனை இருக்கவும் வேண்டுமா?

கால் நூறாண்டு காலம் உருண்டுவிட்டது . அந்த நாள் புத்தளம் பாத்திமாக நிருவாகத்தில் நிலவிய குளறுபடிகளுக்கு எதிராக எழுந்து நின்றவர்களில் ஆங்கில ஆசிரியர் ஷம்ஸுல் ரபீயு அவர்கள் பிரதானமானவர் அல்ல. பலபேர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவருக்கு மட்டும்தான் இந்த தள்ளாத வயதில் இத்தனை சோதனைகளும், வேதனைகளும்.

பாத்திமா நிருவாகத்தில் பல குளறுபடிகள் இருகக் கண்டு அதை எதிர்ப்பதற்காக சில முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார்கள். அந்த அமைப்பினர் சில நாட்கள் பல இடங்களிலும் கூடிக் கூடிப் பேசி இறுதியாக உயர் இடத்துக்கு முறைப்பாடுகளைத் தயார் செய்தார்கள். ஆங்கிலத்தில் புலமைத்துவமிக்க, பலாவி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விஷேட ஆங்கில ஆசிரியராகப் பயிற்றப்பட்ட ஷம்ஸுல் ரபீயு அசிரியருக்கு அந்த முறைப்பாட்டுக் கடித்தைத் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இவ்வளவுதான் இந்த மனுஷன் செய்த பெரும் தவறு.

ஆனால் சம்பவத்துடன் ‌தொடர்புடைய பாடசாலை அதிபரால் இந்த மணுஷணுக்கு எதிராக ஐந்து இலட்சம் கோரி ‌ மான சஸ்ட வழக்கு தாக்கல் தெய்யப்பட்டது. காலம் இருபத்தேழு ஆண்டையும் தாண்டிவிட்டது, புத்தளம் மாவட்ட நீதி மன்றிற்கு எத்தனையோ நீதிபதிகள் வந்து வந்து போய்விட்டார்கள். அவர்களில் எத்தனை பேர் வாழ்வோர் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாது, எத்தனை பேர் ஓய்வு பெற்று சென்று விட்டார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த மான நஸ்ட வழங்கு மாத்திரம் 23 ஆண்டு காலமாக ஒரு இரப்பரைப் போல இழுபட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தனை வருடங்களுக்குப் பின்னர் வழக்கு அண்மையில்தான் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டொரு வாரங்களுக்கு முன்னர் இந்த மூத்த ஆசிரியர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார். கேள்விக் கணைக்கு மேல் கேள்விக் கணைகள், எல்லாமே மறந்து போன பின்னர் எதை நினைவுபடுத்தி எப்படிச் சொல்வது. திக்கு முக்காடிப் போன இந்த மூத்த ஆசிரியரின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தளு தளுத்தது வந்த நெட்டுயிர்ப்புடன்” “யா………அ….ல்….லா…….ஹ்…” என்று தன்னை அறியாமலேயே உச்சரித்தாராம்.

வேதனைகளைச் சுமந்த இதயத்தில் இருந்து எழுந்த அபயக் குரல் அந்த நெடியிலே அர்ஷை சென்றடைந்ததா….? இவரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்த அந்த சட்டத்தரணி அந்த நொடியிலே மயங்கி தரையில் சரிந்தாராம். இந்த சம்பவத்தை நேற்று மாலை இந்த மூத்த ஆசிரியர் என்னுடன் பகிரந்து கொண்டபோது ஒரு கணம் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. என்னை அறியாமலே ”சு……ப…ஹா…..ன…..ல்….லா……ஹ்” என்று வார்த்தை வந்து மறைந்தது.

ஊர் கூடி தேரிழுத்து வம்மை விலைக்கு வாங்கிக் கொண்டாலும் இந்த மூத்த ஆசிரியருக்குப் பாதகமாக அந்த வழக்கு அமைந்து விடக் கூடாது என்று பிரார்தித்துக் கொள்வோம்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All