Puttalam Online
other-news

முத­லாம்­தர வகுப்பில் மாண­வர்­களை சேர்க்க புதிய விதி; அடுத்­த­வ­ருடம் முதல் அமுல்

  • 30 July 2017
  • 660 views

பாட­சா­லை­களில் முதலாம் தரத்­திற்கு மாண­வர்­களைச் சேர்க்கும் குறைந்­த­பட்ச­ வ­யது 5ஆகும். ஐந்து வய­தை­ வி­டக்­கு­றை­வான வய­தை­யு­டைய பிள்­ளை­களை எக்­கா­ர­ணம்­கொண்டும் அதி­பர்கள் அனு­ம­திக்­கக்­கூ­டாது.

கல்­வி­ய­மைச்சு வெளி­யிட்­டுள்­ள­ பு­திய சுற்­ற­றிக்­கையில் இவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது. கல்­வி­ய­மைச்சின் செய­லாளர் சுனில் ஹெட்­டி­யா­ராச்சி வெளி­யிட்­டுள்ள இப்­பு­தி­ய ­சுற்­று­நி­ருபம் ஏலவே நடை­மு­றை­யி­லுள்ள  3சுற்­ற­றிக்­கை­களை மேவி­ய­தாக அமை­கி­றது.

இப்­பு­திய சுற்­ற­றிக்­கையின் அறி­வு­றுத்­தல்கள் யாவும் அடுத்­தாண்டு 2018முதல் அமு­லுக்கு வரு­கி­றது.

அதில் மேலும் குறிப்­பிட்­டுள்ள முக்­கிய சில விட­யங்கள் வரு­மாறு:

ஜன­வரி மாதம் 31ஆம் திக­தி­யன்று பிள்­ளை­யின் ­வ­யது 5வய­தைப்­பூர்த்தி செய்­தி­ருந்தால் முதலாம் தரத்­திற்கு அனு­ம­தி­பெ­ற­மு­டியும்.

06 வய­தைப்­பூர்த்­தி­செய்த பிள்­ளை­க­ளி­ருந்தால் இதனை இரண்­டாம்­கட்­ட­மாக நோக்­க­வேண்டும்.

முதலாம் வகுப்பில் சமாந்­தர வகுப்­பு­களில் இருக்­க­வேண்­டிய மாணவர் தொகை வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி 2016இல் இது 40ஆக­வி­ருந்­தது. இத் தொகை 2018இல் 38ஆகவும் 2019இல் 37ஆகவும் 2020இல் 36ஆகவும் 2021இல் 35ஆகவும் அமை­தல்­வேண்­டு­மெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆறு வகை­களில் ஒரு­பிள்­ளையை பாட­சா­லைக்குச் சேர்ப்­ப­தற்­கென விண்­ணப்­பிக்­க­மு­டியும்.

 முத­லாந்­த­ரத்­திற்கு ஒன்றில் தமிழ்­மொ­ழி­மூலம் அல்­லது சிங்­கள மொழி­மூலம் மாத்­தி­ரமே பிள்­ளை­களைச் சேர்த்­துக்­கொள்­ள­மு­டியும். எந்­தக்­கா­ர­ணம்­கொண்டும் ஆங்­கி­ல­மொ­ழி­மூலம் சேர்க்­க­மு­டி­யாது.

பிள்­ளை­களின் எண்­ணிக்கை வகுப்­பொன்றை விடக்­கு­றை­வாயின் விண்­ணப்­பித்த பாட­சா­லைகள் பிறப்­புச்­சான்­றி­தழை உறு­திப்­ப­டுத்­தி­ய­பின்னர் நேர­டி­யா­கச்­சேர்த்­துக்­கொள்­ள­மு­டியும்.

விண்­ணப்­பிக்கும் பிள்­ளை­களின் எண்­ணிக்கை கூடு­மாயின் நேர்­மு­கப்­ப­ரீட்­சை­யொன்றின் மூலம் மாத்­தி­ரமே சேர்த்­துக்­கொள்­ள­வேண்டும்.

நேர்­மு­கப்­ப­ரீட்­சை­ச­பையில் அதிபர் ஆரம்­பப்­பி­ரி­வுப்­பொ­றுப்­பாளர் உத­வி­அ­திபர் பாட­சாலை அபி­வி­ருத்­திச்­சங்க பிர­தி­நிதி மற்றும் பழை­ய­மா­ண­வர்­சங்­கப்­பி­ர­தி­நி­தி­யொ­ருவர் இதில் இடம்­பெ­ற­வேண்டும்.புள்­ளி­யிடும் முறைகள் தேர்ந்­தெ­டுக்கும் முறை­மைகள் பற்றி விரி­வா­கக்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

முத­லாந்­த­ரத்­திற்கு பிள்­ளை­களை சேர்த்­துக்­கொள்­வ­தற்­கான இறு­தித்­தி­கதி ஜூன் 30க்கு முன்னர் ஆகும்.

நேர்­மு­கப்­ப­ரீட்சை செப்­டம்பர் மாதம் 15ஆம் திக­திக்கு முன்னர் நடாத்­தப்­ப­ட­வேண்டும். அதன்­படி தெரி­வாகும் தற்­கா­லிக பட்­டி­யல்­களை செப்.30க்கு முன்னர் அறிவித்தல் பலகைகளில் காட்சிப்படுத்தல்வேண்டும்.

மேன்முறையீடுகளை  அக்.15வரை ஏற்றுக்கொள்ளப்படும். அவற்றைப்பரிசீலிப்பது அக்.25முதல் நவம்பர் 20வரையாகும். அதன்படி இறுதிப்பட்டியலை டிசம்பர் மாதம் 1ஆம் திகதி வெளியிடல்வேண்டும்.

பின்னர் முதலாவது தவணை ஆரம்பமாகும் தினத்தில் பிள்ளைகளை முதலாம்தரவகுப்புகளில் இணைத்து ஆரம்பித்தல் கட்டாயமானதாகும்.

VIRAKESARY

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All