Puttalam Online
paq-news-bulletin

PAQ ன் வருடாந்த பித்ரா உலர்உணவு விநியோகம் வெற்றிகரமாக நிறைவு

  • 2 August 2017
  • 295 views

(PAQ Media)

கட்டார் வாழ் புத்தளம் சகோரர்களின் அமைப்பு (PAQ) ஏற்பாடு செய்த வருடாந்த பித்ரா விநியோகம் நோன்பு பெருநாளைக்கு முன்னைய நாள் காசிமிய்யா அரபு கலாசாலையில் வெற்றிகரமாக நிறைவுற்றது. கட்டார் வாழ் புத்தளம் சகோரர்களின் அமைப்பின் புத்தளம் செயற்குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

சுமார் 155 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இவ்விநியோகத்தில் புத்தளம் நகர எல்லைக்குட்பட்ட வறிய, விதவை தாய்மார்கள், ஏற்கனவே PAQ இலிருந்து வேறு உதவிகளைப் பெற்ற குடும்பங்கள் போன்றன உள்ளடக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வருகைதந்திருந்த PAQ அமைப்பின் ஆலோசனைக் குழு மற்றும் செயற்குழு உறுபப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தமது உழைப்பின் மூலம் தமது மண்ணுக்கும் உறவுகளுக்காகவும்  தொடர்ந்து உதவி வழங்கி வரும் கட்டார் வாழ் புத்தளம் உறவுகளின் முயற்சியை அல்லாஹ் ஏற்று அங்கீகரிக்கவேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All