Puttalam Online
regional-news

முன்னாள் அதிபருக்கு பிரியாவிடைவழங்கியது பு/இந்து மத்திய கல்லூரி..!

  • 7 August 2017
  • 382 views

Rigmond Heiley Anthonipillai

புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் பெருமதிப்புக்குரிய திரு.மா.நாகராஜா சேர் அவர்களுக்கு கடந்த மாதம் 31ம் திகதி கல்லூரி பிரதான மண்டபத்தில் மிகவும் சிறப்பானதொரு முறையில் பிரியாவிடை நடைபெற்றதை, அவருடைய காலத்தில் அவருக்கு பக்கபலமாக நின்று அவருடன் சேர்ந்து கல்லூரி நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக கடமையாற்றிய நான் சொல்ல முடியாத அளவிற்கு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இக்கல்லூரியின் வளர்ச்சியில் இவரிற்கு முன்னர் அதிபர்களாக கடமையாற்றிய பெருமதிப்பிற்குரிய கைலேஸ்வரன் சேர், பெரும்மதிப்பிற்குரிய காலம்சென்ற சிறீஸ்கந்தராஜா சேர், பெருமதிப்பிற்குரிய வி.நடராஜா சேர், வி.ராமச்சந்திரன் சேர் ஆகியோர் மிகப்பெரிய அளவில் தமது பங்களிப்புகளை செய்திருந்ததை சகலரும் அறிவர்.

இருந்தாலும் ஏறக்குறைய 20 ஆண்டுகள் புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றி இக்கல்லூரியை வடமேல் மாகாணத்தில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக உருவாக்கிய பெருமை பெருமதிப்பிற்குரிய மா. நாகராஜா அதிபரையே சேரும்.

ஒரு மகா வித்தியாலமாக இருந்த இக்கல்லூரியை தனது கடும் உழைப்பாலும் தனக்கிருந்த செல்வாக்காலும் புத்தளம் இந்து மத்திய கல்லூரி என்ற ஒரு உயர்நிலைக்கு கொண்டுவந்த பெருமை மா. நாகராஜா அதிபரையே சேரும்.

எதற்கும் அஞ்சாத உறுதியான மனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மிகச் சிறந்த தலைமைப் பண்பு, மற்றவர்களை மதிக்கும் சிறந்த குணவியல்பு, எத்தகைய ஒரு சூழ்நிலையிலும் மனம் தளராத நெஞ்சம், ஆகியனவே இவரது வெற்றியின் ஆயுதங்களாகும். இவரைப் பற்றியும் இவர் இந்து மத்திய கல்லூரிக்கு ஆற்றிய சேவைகளைப் பற்றியும் எழுதுவதற்கு பல நாட்களும் போதுமானதாக இருக்காது.

இவரிடமுள்ள மற்றதொரு சிறந்த குணாதிசயம் இன மத வேறுபாடுகளை சிறிதளவேனும் பார்க்க மாட்டார். எல்லா ஆசிரியர்களையும் எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரியாகவே எண்ணுவார்.

இறுதியாக ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதாவது புத்தளம் வாழ் சகல தமிழ்மொழி பேசும் மக்களும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருந்து அவர் மேலும் பல சமூக சேவைகள் ஆற்ற அவருக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என்பதேயாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All