Puttalam Online
education

புத்தளம் தில்லையடி சதாமியாபுரம் அல் அக்ஸா முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வுகள்

  • 8 August 2017
  • 286 views

ரூஸி சனூன்  புத்தளம்.

புத்தளம் தில்லையடி சதாமியாபுரம் அல் அக்ஸா முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வுகள் அண்மையில் (28) முன்பள்ளி மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
முன்பள்ளி பொறுப்பாசிரியை பாத்திமா முஸைனா மற்றும் உதவி ஆசிரியைகளின் வழிகாட்டலில் முன்பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள் இணைந்து செலவுகள் இன்றி இயற்கை பொருட்களால் உருவாக்கிய கண்காட்சி பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி கூடத்தினை புத்தளம் வலய கல்வி பணிமனையின் தமிழ் பிரிவு சித்திரப்பபாடத்துக்கான   ஆசிரிய ஆலோசகரும், நாடறிந்த ஓவியருமான எம்.எம். முஹம்மது, மற்றும் தில்லையடி சாரா கல்வி மேம்பாட்டு அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த 30 ஆக்கங்களில் பரிசுக்குரிய முதல் தர 10 ஆக்கங்களை அதிதியாக கலந்து கொண்ட எம்.எம். முஹம்மது தெரிவு செய்து வழங்கினார்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All