Puttalam Online
regional-news

பெரிய பள்ளிக்கு சொந்தமான காணி அபகரிக்கப்பு – மக்கள் விசனம்..!   

  • 11 August 2017
  • 1,597 views

புத்தளம் பெரிய பள்ளிக்கு சொந்தமானது என்று அறியப்படும் கழிவறை கட்டிடத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள சுமார் 3  முதல் 4 அடி வரையிலான காணி  தனியார் ஒருவரினால் அபகரிக்கப்பட்டு அதில் கட்டிடம் ஓன்று கட்டப்படுவதாக இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் கூடிய ஜமாஅத்தார்களுக்கிடையில்  சலசலப்பொன்று ஏற்பட்டது.

இது தொடர்பாக பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்களை அணுகியபோது, குறித்த காணி பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமானது என்றும்   நிர்வாக சபை தலைவர் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.   குறித்த சட்டரீதியற்ற  நிர்மாணப் பணியினை  ஒருபோதும்  அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டது.

இவ்வாறு பொிய பள்ளி நிர்வாகத்தின் தடையையும் மீறி தொடர்ந்து கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஜமாஅத்தினரால் குற்றம் சாட்டப்படுகிறது.

புத்தளத்தின் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரசாக்களுக்கு எமது முன்னோர்களினால் அன்பளிப்பாக  வழங்கப்பட்ட மிகப்பெறுமதியான வக்பு சொத்துக்கள் தற்பொழுது ஒரு சிலரினால் சூரையாடப்பட்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமே மேற்படி பெரியபள்ளியின் சொத்து சூரையாடப்படுவதாகும். இதனை பாதுகாக்க வேண்டியது புத்தளத்தைச் சேர்ந்த எம் அனைவரினதும் கடமையாகும்.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All