Puttalam Online
regional-news

மின் கம்பம் நாட்டுவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு

  • 11 August 2017
  • 417 views

ரூஸி சனூன்  புத்தளம்.

இலங்கை மின்சார சபையினால் புத்தளம் மூன்றாம் குறுக்குத்தெருவில் மின் கம்பிகளை புதிய கம்பிகளாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்துக்காக மின் கம்பம் ஒன்றினை குறித்த ஒரு பிரதேசத்தில் நாட்டுவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைள் வெள்ளிக்கிழமை நண்பகல் (11) புத்தளம் மூன்றாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள  முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எச்.எஸ். இஸ்மாயில் வீட்டு சந்தியில் இடம்பெற்றது.
புத்தளம் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இலங்கை மின்சார சபையினால் 20 இலட்சம் ரூபா செலவில் புதிய மின் கம்பிகளை பொருத்தும் நடவடிக்கைகள் புத்தளம் பிராந்திய பொறியியலார் எம்.ஐ.எம். இர்ஷாதின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் நாட்டப்படும் மின் கம்பம் போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஐ.தே.கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி, இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம். நுஸ்கி ஆகியோரும் குறித்த பிரதேசத்துக்கு வருகை தந்து பொறியியலார் எம்.ஐ.எம். இர்ஷாதுடன் இது தொடர்பாக கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All