Puttalam Online
regional-news

மர்ஹூம் மனாஸிர் ஞாபகார்த்தமாக நிதி உதவி

  • 12 August 2017
  • 1,462 views

ரூஸி சனூன்  புத்தளம்.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்குக்கு, கால்பந்தாட்ட போட்டிகளின் போது வீரர்களை மாற்றுதல் மற்றும் போட்டி நிறைவடையும் நேரத்தை வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் காண்பிக்கும் இலக்கத்தகடு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் நகரில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிகளை சர்வதேச போட்டிகளுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைப்பதற்கு புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இலக்க தகடு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணியின் முன்னணி வீரரும், ட்ரீம்ஸ் நிறுவனத்தின் அதிபதியுமான எம்.என்.எம். இர்பான் புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக்கிடம் சனிக்கிழமை (12) மாலை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றின் போது  இதனை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
புத்தளத்தில் அண்மையில் டெங்கு காய்ச்சலினால் மரணமான விக்டோரியன்ஸ் கிரிக்கட் கழக தலைவர் எஸ்.எச்.எம். மனாஸிர் ஞாபகார்த்தமாக பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் இதனை பெற்றுக்கொள்ள லீக் தலைவரிடம் பணம் வழங்கியுள்ளார்.
இதனை கொள்வனவு செய்வதற்காக குறித்த நிறுவனத்துக்கு லீக் தலைவர் சென்றபோது நிறுவனத்தின் அதிபதியான எம்.என்.எம். இர்பான் இதனை தான் இலவசமாக தருவதாக உறுதியளித்துள்ளார்.
எனவே விக்டோரியன்ஸ் கிரிக்கட் கழக தலைவர் மர்ஹூம் எஸ்.எச்.எம். மனாஸிர் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதியிலிருந்து லீக் பாவனைக்கென பிளாஸ்டிக் கதிரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக லீக் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் தெரிவித்தார்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All