Puttalam Online
current

புத்தளத்தின் மூத்த மகன் கஸ்ஸாலி JP அவர்களை பிரார்த்தனைகளோடு வழியனுப்பி வைப்போம்..!

Newton Isaac

”ட….க்……..ட….க்……..” என இதயவறைக்குள் கிடந்து துடித்துக் கொண்டிருந்த கையளவு இதயம் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. வருடக் கணக்கில் “ க……….ட….…க…………ட” என ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் கால ஒலிம்பியா தட்டச்சப் பொறியின் சத்தம் நின்று போனது.

அதன் அர்த்தம் நகரத்தின் மூத்த சமூக சேவையாளர் எச்.எச்.கஸ்ஸாலி தனது வாழ்வுப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு எம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார். இன்று காலை பெரிய பள்ளிவாசலில் இருந்து 40404 அந்த சோகச் செய்தியைக் கொண்டு வந்தபோது ஒரு கனம் எனது இயக்கமும் ஆனேகமாக நின்றது போல ஒரு பிரமை.

சில மாதங்களுக்கு முன்னர் அவருடன் கலந்துரையாடி அவர் பற்றி இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன் என்பதில் ஒரு ஆத்ம திருப்தி எனக்கு.

பாராளுமன்ற உறுப்பினர் நெய்னா மரிக்காரின் பக்கபலமாக நின்றுழைத்த மர்ஹூம் கஸ்ஸாலி அவர்கள் புத்தளம் வலயக் கல்விப் பணிமனை திறப்பு விழாவின் போது

 

அமைதியான ஒரு நல்ல மனிதர். முன்னாள் நிதி அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். நயினா மரிக்காரின் பிரத்தியேக ஆளணியில் அபிவிருத்தி அலுவலர் பதவி வகித்தவர். நமது நகரில் தற்போது அமைக்கப்பட்டுவரும் மாவட்ட விளயைாட்டரங்கின் நிலம் நம்மவர் கையிலிருந்து நழுவிப் போய் விடாமல் தனது சகாக்களோடு ஒரு போராட்டத்தை நடாத்தி அதை நமக்காக பாதுகாத்துத் தந்தவர் என்ற தகவலை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்தாமல் விட்டுப் போனால் அந்த உண்மைகள் அவருடன் அவரது மண்ணறைக்குப் யோய் என்றுமே வெளிவராத ஒன்றைாக மறைந்து போய்விடும். அது பற்றியெல்லாம் அவரைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய ஆக்கத்தில் கூறிவிட்டேன்.

அவர் வாழ்ந்த மௌலாம் மக்காம் பள்ளி இன்று இந்த நகரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கும் பள்ளிவாசல்களில் ஒன்றாக இருக்க அவரின் பங்களிப்பு தனித்துவமானது. புத்தளம் வரலாற்றில் ஊண்றிப் பதியப்பட வேண்டியது. அந்த நினைவுகள் காலா காலத்துக்குப் பாதுகாக்கப்பட வேண்டியது.

மொழிப் பிரச்சினை வெகுவாக உள்ள நமது நகரத்தில் அரச அலுவலகங்களுடனும், உயர் இடங்களுடனும் கடிதத் தொட்புகளுக்காக நாடக் கூடியவர்களாக இருந்தவர்கள் இருவர். ஒருவர் மர்ஹும் அப்துல் சமீவு ஜே.பி அவர்கள் மற்றவர் இப்போது நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் மூத்த நகர மகன் கஸ்ஸாலி அவர்கள்.

வாழ்வாங்க வாழ்வதற்கு யாரும் வரம் வாங்கி வரவில்லை. அவரவருக்கு எண்ணிக் கொடுக்கப்பட்ட மூச்சுகள் உள்வாங்கி வெயிட்டு முடிந்ததும் விடைபெற வேண்டியதுதான். பிரிவு தேவயைாக இருந்தாலும் கூட.

எனவே விடைவெறும் மூத்த நகர மகன் கஸ்ஸாலி அவர்களை பிராரத்தனைகளோடு வழியனுப்பி வைப்போம்..!

அவருடைய மண்ணறையையும் மறுமை வாழ்வையும் எல்லாம் வல்லவன் ஒளிமயமாக்கி வைப்பானாக..!

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


2 thoughts on “புத்தளத்தின் மூத்த மகன் கஸ்ஸாலி JP அவர்களை பிரார்த்தனைகளோடு வழியனுப்பி வைப்போம்..!

  1. Usama - Puttalam says:

    எம்மை விட்டும் பிரிந்த கஸ்ஸாலி அவர்கள் தான் ஒரு அரசியல் வாதியின் பிரத்தியேக செயலாளர் என்ற பதவியினை பயன்படுத்தி இந்த ஊருக்கு எவ்வளவோ சேவைகளை செய்திருக்கிறார் என்பது மேலே உள்ள கட்டுரை மூலம் தெளிவாகிறது. ஆனால் வெட்கக்கேடு இன்று இருக்கும் அரசியல் வாதிகளின் செயலார்களோ…? நிலைமை தலை கீழாக இருக்கிறது.

  2. mazahim jamaldeen says:

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All