Puttalam Online
regional-news

புத்தளம் மாவட்டம் சார்பாக வெற்றி பெற்ற சித்திரங்களை தெரிவு செய்யும் படலம்

  • 13 August 2017
  • 165 views

ரூஸி சனூன்  புத்தளம்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் முன்பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட சித்திரம் வரையும் போட்டியில் புத்தளம் மாவட்டம் சார்பாக வெற்றி பெற்ற சித்திரங்களை தெரிவு செய்யும் படலம் வெள்ளிக்கிழமை (11) காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
முன்பள்ளி சிறார்களுக்கு மத்தியில் கலை ஆற்றலையும், நாட்டு பற்றினையும் ஊக்குவிக்கும் நோக்கில் “அதிகாலை உதயம் காணும் எழில் மிகு நாடு” (அருண தகின ரட)  எனும் தலைப்பில் முன்பள்ளி மாணவர்கள் அவர்களது சுய விருப்புக்கு ஏற்றவாறு சித்திரம் வரையும் போட்டிதனை சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு நாடளாவிய ரீதியாக நடாத்தி இருந்தது.
புத்தளம் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் தலா 03 சித்திரங்கள் வீதம் 16 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட 48 சித்திரங்கள் இதன் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த 48 சித்திரங்களில் புத்தளம் மாவட்டம் சார்பாக தெரிவு செய்யப்பட்ட 24 சித்திரங்கள் அடுத்து வரும் தேசிய மட்ட போட்டிக்கு  தகுதி பெற்றுள்ளன.
புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்தாவின் வழிகாட்டலில் முன் பிள்ளை பருவ புத்தளம் மாவட்ட இணைப்பாளர் நீலக நந்தன குமாராவின் ஏட்பாட்டில் நடைபெற்ற இந்த சித்திரங்களை தெரிவு செய்யும்   நிகழ்வில் பிரதம நடுவராக புத்தளம் வலய கல்வி பணிமனையின் சித்திரப்பாட ஆசிரிய ஆலோசகரும், நாடறிந்த ஓவியருமான எம்.எம். முஹம்மது கலந்து கொண்டார்.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All