Puttalam Online
regional-news

கல்பிட்டியில் கட்டாகாலி நாய்களுக்கான தடுப்பு முகாம்

  • 13 August 2017
  • 138 views

(Rizvi Hussain)

கல்பிட்டி சுற்றுலாத்துறை சங்கத்தின் செயலாளர் மலிக் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் வாடி வீட்டு முற்ற வெளியில் மிருக வைத்திய முகாம் நேற்று முன்தினம் (11-08-2017) நடைபெற்றது.

கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், வீட்டு செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்குதல், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், ஏனைய வைத்திய ஆலோசனைகளை வழங்குதல் போன்ற பல சேவைகளை இலவசமாக இம் மிருக வைத்திய முகாமில் நடைபெற்றது.

இவ்வைத்திய முகாம் 15 நாட்களுக்கு கல்பிட்டியிலுள்ள பல பகுதிகளில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All