Puttalam Online
regional-news

மனாஸிர் ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப்போட்டியில் புத்தளம் லவ் பேட்ர்ஸ் அணி சம்பியன்

  • 25 August 2017
  • 554 views

ரூஸி சனூன்  புத்தளம்.
புத்தளம் நகரில் அண்மையில் டெங்கினால் மரணமான விக்டோரியன்ஸ் கிரிக்கட் கழகத்தின் தலைவர் எஸ்.எச்.எம். மனாஸிர் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியில் புத்தளம் லவ் பேட்ர்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.
அணிக்கு தலா ஆறு பேர்களை இந்த போட்டி தொடரானது புத்தளம் இஜ்திமா மைதானத்தில் அமைந்துள்ள நாகாஸ் கிரிக்கட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (25) மாலை நடைபெற்றது.
இந்த போட்டி தொடரில் புத்தளம் என்.டி.எச், பிக் பேங்க், சிட்டி கலக்ஸி, லவ் பேர்ட்ஸ், பீ சிக்ஸ், மான் கராட்டே ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.
நான்கு ஓவர்களை கொண்ட விலகல் முறையிலான இந்த போட்டி தொடரின் இறுதி போட்டிக்கு லவ் பேர்ட்ஸ் அணியும், என்.டி.எச் அணியும் தகுதி பெற்றன.
இறுதி போட்டி ஆரம்பமாவதற்கு முன்பாக இரு அணியின் வீரர்களினாலும் மரணமான விக்டோரியன்ஸ் கிரிக்கட் கழகத்தின் தலைவர் எஸ்.எச்.எம். மனாஸிர் ஞாபகார்த்தமாக இரு நிமிட நேர மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டன.
இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய என்.டி.எச் அணி நான்கு ஓவர்கள் நிறைவில் 03 விக்கட் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லவ் பேட்ர்ஸ் அணி விக்கட் இழப்பின்றி 02 ஓவர் 03 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதால் 05 விக்கட்டுகளினால் லவ் பேர்ட்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியனாகியதோடு இரண்டாம் இடத்தினை என்.டி.எச் அணி பெற்றுக்கொண்டது.
சிறந்த ஆட்ட நாயகனாக லவ் பேர்ட்ஸ் அணியின் வீரர் பெபியன் பெக்ஸ்ட்டா தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை இந்த போட்டி தொடரின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாளையொட்டி இடம்பெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

 VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All