தொடரான பிறை அவதானம்;
“அல் குர்ஆன் இருதிப்பிறையை உருஜூனில் கதீம் என்று சூரா யாசீன் 39 வசனத்தில் குறிப்பிடுகின்றது.” 36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
ஹதீஸ் கூறுகின்ற “கும்மா” அது மறைக்கப்படும் போது மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யுங்கள் அல்லது மாதத்தை பூர்த்தி செய்யுங்கள். இதனை உறுதிபடுத்தும் மறைக்க மறுக்க முடியாத இறை அத்தாட்சி தான் அமெரிக்க நாடுகளில் (திங்கள் 21.08.2017) அன்று ஏற்பட்ட சூரிய கிரகணம்.
உலகில் யாரெல்லாம் செவ்வாய் கிழமை ஃபஜ்ரை அடைகிறார்களோ, அவர்களுக்கு துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகிறது.
இதன் அடிப்படியில்
பிறைகளை சர்ச்சையாக பார்கின்ற புத்திஜீவிகள் ஒன்றை சிந்திக்கக்கூடாதா?
இஸ்லாத்தை பரிபூரணமாக்கிய அல்லாஹ், மனித குலத்திற்கான கலண்டரை (நாட்காட்டியை) அஹில்லக்களை (பிறைகளை) கொண்டு அமைத்துள்ளதாக 2:189 ல் கூறுகிறான்.
“பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அவை மனிதர்களுக்கு காலக் கணக்குகளையும் ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகும்”
“10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.”
“6:104. நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).”
மேற்கூறப்பட்ட இந்த அடிப்படையை இன்றைய வானியல் விஞ்ஞானம் உண்மைப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
பிறை தொடர்பான அதிகம் பிரபலமான ஸஹீகாண ஹதீஸ்
“பிறையை கண்டு நோன்பு வையுங்கள் அதை கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள்”
(புகாரி 1900) இன்னும் புகாரி 1906, 1907 இல் காணலாம்
மேலுள்ள ஹதீஸையும் குர்ஆன் (2:189) இணையும் முழுமை படுத்தும் ஒரு ஹதீஸ் (இந்த ஹதீஸ் பேசப்படுவதில்லை )
“நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரம்) களை மனித சமூகத்திற்கு திகதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாக கொண்டே நோன்பு வையுங்கள், அவற்றின் காட்சியை அடிப்படையாக கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள், எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும் போது முப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்”
அறிவித்தவர்: இப்னு உமர் (ரழி) நூல்: முசன்னப் அப்தூர்ரஸ்ஸாக் (7306)
பிறையின் படித்தரங்களை முழுமையாக அவதானித்தே மாதங்கள் தீர்மானிக்க பட வேண்டும் என்பதே மிக தெளிவான அறிவும் வழிகாட்டலும்! மாறாக ஒரு பிறையை மட்டும் அவதானிப்பது அல்ல. அது பிரிவினைக்கும் குழப்பத்துக்குமே இட்டு செல்லும் அதனை கண்கூடாக காண்கிறோம்
இந்த தெளிவான உண்மைகளை ஆய்வுகளுக்குட்படுத்தாமல், அதிகமான இமாம்களால் ஒதுக்கப்பட்ட பலவீனமான ஒரு சில அறிவிப்புகளை (வாகன கூட்டம், குறைப் சம்பவம் ) பிறை பிரச்சினைக்கு பிரதான ஆதாரமாக ஏடுத்து கொண்டு இது எமது நிலப்பாட்டுக்கு தான் ஆதாரம் என்று பிளவு பட்டு கொள்வது அறியாமை இல்லையா?
கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் என்ற காலத்தில் வாழ்ந்த நபி (ஸல்) அவர்களும் ஸஹாபா தோழர்களும். இன்று உள்ளது போல் மஃரிப் வேலையில் பிறை பார்த்து மறு நாள் மாதத்தை ஆரம்பித்த்து இருக்க வேண்டும்! ஆனால் அப்படி ஒரு ஆதாரம் கூட இல்லையே!
அப்படி என்றால் எவ்வாறு இஸ்லாமிய மாதங்களை எவ்வாறு துல்லியமாக ஆரம்பித்தார்கள் முடித்தார்கள் என்று சிந்திக்க வேண்டாமா?
என்னை எவ்வாறு தொழ கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள். எனது ஹஜ்ஜை எழுதி கொள்ளுங்கள். என்று வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள். இஸ்லாமிய மாதங்களை (நோன்பையும், ஹஜ்ஜையும்). ஆரம்பிப்பதற்கும் தீர்மானிப்பதற்கும் மஃரிப் வேளையில் பிறை பார்க்குமாறு வழிகாட்டினார்களா?
சுமார் 09 வருடங்கள் நோன்பு நோற்ற நபி (ஸல்) அவர்கள் மஃரிப் வேளையில் பிறை பார்த்து ரமழானை, ஷவ்வாலை, ஆரம்பித்தார்கள் என்பதற்கு அவர்களின் வரலாற்றில் இருந்தது ஒரு ஆதாரம் கூட கொண்டு வர முடியாது உள்ளதே?
யூதர்களின் நாள் மஃரிபில் ஆரம்பமாகிறது அவர்களின் திணிப்பே தவிர வேறு எதுவும் இங்கு இல்லை.
(அரபா தினத்தையும் ஹஜ்ஜையும் தீர்மானித்த தீர்மானிகின்ற சவூதி அரசாங்கமே அதில் ஏற்படுகின்ற தவறுகளுக்கு பொறுப்பு கூறவேண்டும். ஹஜ்ஜாஜிகளின் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்று கொள்ள போதுமானவன்.)