Puttalam Online
sports

ஆண்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மென்பந்து கிரிக்கட் போட்டி

  • 1 September 2017
  • 593 views

-க.மகாதேவன்-

உடப்பு கிாிக்கட் கிளப்பின் ஏற்பாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற அணிக்கு எட்டு ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் போட்டி ஒன்று ஆண்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதன் போது சுமாா் 14விளையாட்டுக் கழகங்கள் இதில் பங்குபற்றின.
இறுதிப் போட்டி வியாழக்கிழமை(31)மாலை மூன்று மணிக்கு ஆரம்பமாகியது.இதன் போது வளர்மதி கிரிக்கட் கழகம் ஸ்ரீராம் விளையாட்டுக் கழகம் இறுதிப்  போட்டிக்கு   தெரிவாகி களத்தில் துடுப்பெடுத்தாடியது. ஸ்ரீராம் விளையாட்டுக் கழகம் 61 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வளர்மதி விளையாட்டுக் கழகம் 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதன் போது வளர்மதி விளையாட்டுக் கழகம் 13ஓட்டங்களால் வெற்றியீட்டியது.தொடர்ச்சியாக மூன்று முறை வளர்மதி விளையாட்டுக் கழகம் வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் போட்டிக்கு வடமேல் மாகாண கல்வி கலாசார  இளைஞர்விளையாட்டுத்துறை மற்றும் தொடர்பாடல் அமைச்சர் சந்தியாகு ராஜபக்ஷ விஷேட அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கு கேடயத்தையும் பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்தாா்.
இந்நிகழ்வில் ஆராச்சிக்கட்டு பிரதேச சபை முன்னால் உபதலைவா் திரு. கே. தெட்சணாமூர்த்தி மற்றும் ஆராச்சிக்கட்டு பிரதேச சபை முன்னால் உறுப்பினா் திரு.வே.சிவபாலன் ஆகியோரும்   கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கினாா்கள்.
முதல் பரிசைப் பெற்ற வளர்மதி அணிக்கு 30ஆயிரம் ரூபாவும் வெற்றிக் கேடயமும் இரண்டாம் பரிசைப் பெற்ற ஸ்ரீராம் அணிக்கு 18ஆயிரம் ரூபாவும் வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All