Puttalam Online
other-news

நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை; இந்திராவிற்கு பின்னர் இத்துறையை ஏற்கும் 2-வது பெண்!

  • 3 September 2017
  • 573 views

மத்திய மந்திரிசபையில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட 9 பேர் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டனர்.

மந்திரிகளின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து வந்த மோடி, திருப்திகரமாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்தார். அதன்படி மத்திய மந்திரிசபையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 9 பேரை புதியதாக அமைச்சரவைக்கு மத்திய அரசு கொண்டு வந்தது. தர்மேந்திர பிரதான், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகிய 4 இணை அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய அமைச்சரவையில் மிகவும் முக்கியமான பதவியான பாதுகாப்புத் துறையானது நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிகவும் முக்கியமான பொறுப்பானது இந்திரா காந்திக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு மந்திரியாக பொறுப்பு வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற்று உள்ளார். பியூஸ் கோயலுக்கு ரெயில்வே ஒதுக்கப்பட்டு உள்ளது, தர்மேந்திர பிரதானுக்கு கூடுதல் பொறுப்பாக திறன்மேம்பாடுத்துறை வழங்கப்பட்டு உள்ளது. சுரேஷ் பிரபு வர்த்தகதுறை அமைச்சராகிறார் என தெரியவந்து உள்ளது.
 சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு நதிநீர் மேம்பாட்டுத் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All