Puttalam Online
regional-news

இலங்கை அணி சார்பாக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஜே.எம். ஜஹீர் தெரிவு

  • 6 September 2017
  • 966 views

 ரூஸி சனூன்  புத்தளம்.

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான 45 வது ஆசிய கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் இலங்கை அணி சார்பாக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஜே.எம். ஜஹீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடர் இம்மாதம் 06 ம் திகதி தொடக்கம் 16 ம் திகதி வரைக்கும் ஈரான் நாட்டின் சீராஸ் நகரில் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணியானது ஈரான், சீனா, மலேசியா மற்றும் இந்திய நாடுகளுடன் போட்டியிடவுள்ளது.
இதேவேளை இந்த போட்டி தொடரில் இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியரும், புத்தளம் கால்பந்தாட்டலீக்கின் செயலாளரும், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளன பொருளாருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத் கலந்து கொள்கிறமையும் குறிப்பிடத்தக்கது.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஜே.எம். ஜஹீரை வாழ்த்தி புத்தளம் நகரில் பதாதைகளும் காட்சி படுத்தப்பட்டுள்ளன

VAT
 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All