Puttalam Online
sports

புத்தளம் கூல் கலக்ஸி அணி சம்பியன்

  • 11 September 2017
  • 530 views

ரூஸி சனூன்  புத்தளம்         
புத்தளம் சிட்டி கலக்ஸி கிரிக்கட் கழகம் நடாத்திய சிட்டி கலக்ஸி ப்ரிமியர் லீக் சீஸன் 02 (சி.பீ.எல்) கிரிக்கட் போட்டி தொடரில் புத்தளம் கூல் கலக்ஸி அணி சம்பியனாக தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டி தொடரின் இறுதி நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை புத்தளம் இஜ்திமா மைதான வளாகத்தில் அமைந்துள்ள சிட்டி கலக்ஸி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தொடரில் புத்தளம் பயர் கலக்ஸி, ஹொட் கலக்ஸி, ஸ்டார் கலக்ஸி, கூல் கலக்ஸி மற்றும் ரெட் கலக்ஸி ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றன.
முதல் சுற்று புள்ளிகள் அடிப்படையிலும் இரண்டாம் சுற்று விலகல் அடிப்படையிலும் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் கூல் கலக்ஸி அணியும், ஸ்டார் கலக்ஸி அணியும் பலப்பரீட்சை நடாத்தின.
10 ஓவர்களை கொண்ட இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கூல் கலக்ஸி அணி 10 ஓவர் நிறைவில் 09 விக்கட்டுகளை இழந்து 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்டார் கலக்ஸி அணி சகல விக்கட்டுக்குகளையும் இழந்து 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதால் 07 மேலதிக ஓட்டங்களால் கூல் கலக்ஸி அணி வெற்றி பெற்று சம்பியனாகியதோடு ஸ்டார் கலக்ஸி அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக எம்.சிப்ரானும், அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரராக லிபீசனும்,
அதிக விக்கட்டுக்களை கைப்பற்றிய வீரராக ஜப்ரானும், அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக ரங்கனும் தெரிவாகினர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All