Puttalam Online
historical-notes

புத்தளம் மீலாத் ஷரீப் வரலாறு. மீலாத் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா (1935 – 1985) நினைவு மலரிலிருந்து

  • 18 September 2017
  • 529 views

புத்தளம் மீலாத் ஷரீப் வரலாறு

முன்னோட்டம்

நபிகளின் மீது வாஞ்சையும் அன்பும் மக்களிதயங்களில் பொங்கிப் பிரவகித்தது நபிகள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல

உண்மை முஸ்லிமின் உள்ளத்தில்

நாயகம் முஸ்தபா உறைகிறார்

நம்முடைய வெற்றியின் புகழ் எல்லாம்

நபிகள் நாதருக்கே

 

என்ற அல்லாமா இஃபாலின் கவிதைவரிகள் நபிகள் மீது அன்பும் நேசமும் பொங்கிப் பிரவகிக்கும் இன்றைய மனிதனின் இதயத்தை அப்படியே சொல்வனவாகும். நபிகளின் மீதான அன்பையும் நேசத்தையும் வெளிப்படுத்த ஒவ்வொரு காலங்களிலும் மக்கள் ஒவ்வொருவகையில் முயன்று வந்துள்ளனர்.”மீலாதுன்நபி ” அவற்றுள் ஒன்று குற்றங் குறைகள் இம்முறைகளில் இடம்பெற்றிருக்க முடியும். அவை களையப்படவேண்டியனவே. அனால், மக்களின் நியாயமான உணர்ச்சிகளை நபிகளின் மீது தமது அன்பை வெளிப்படுத்த அவர்களுக்குள்ள உரிமையை துச்சமாக கருத முடியாது. “ரங்கிலா ரசூல் ” என்ற நபிகளை அவதூறு செய்து எழுதப்பட்ட நூலின் எதிரொலியோடு மீலாத் விழா தோற்றம் பெற்றதே அன்றி மார்க்கத்தின் பர்ளு ஐன்களின் ஒன்றல்ல என்பது சாதாரண செய்தி.

மௌட்டீகங்கள் முறியடிக்கப்பட வேண்டயனவே ஆனால் எல்லாமே மௌட்டீகமல்ல. இது மார்க்கத்தில் உண்டா? என்ற ஒவ்வொன்றைப்பற்றிய கேள்வியும் இன்று அவசியமெனக் கருதப்படுகிறது.அனால், மார்க்கமென்பது அவரவர் சிந்தனைக்கு மட்டும் சொந்தமுடையதல்ல. அது பஞ்சாங்கமோ கட்சி விஞ்ஞாபனமோ அல்ல. மார்க்கத்தை அறியவும் மார்க்கத்தை பயிலவும், மார்க்கத்தைச் சிந்திக்கவும், மார்க்கத்தை வழி நடக்கவும் ஒவ்வொரு முஸ்லிமும் உரிமை பெற்றுள்ளான். “நபிவிழா” என்பது ” மௌஸாத் ” இயக்கமல்ல ஒழித்துக்கட்ட காலத்தின் தேவையோடு தோன்றிய அது தேவையற்ற போது மறையும் அல்லது  காலத்திற்கேற்ப மாறும்.

அதைக்கட்டிக் காப்பதல்ல சமுதாயத்தின் இன்றைய தேவைக்கேற்ப அதை மறுசீரமைக்க உதவுவதே எமது பணி.

ஆரம்பம்

புத்தளம் மீலாத் விழாவின் ஆரம்பமாக 1935ம் ஆண்டு குறிப்பிடப்படுகிறது. அதற்கு ஒரு 5 வருடங்களுக்கு  முன்பே நபிகள் பிறந்த தினம் சிறு அளவில் நினைவுபடுத்தப்பட்டு வந்துள்ளது. அல்- உறாஜ் எச்.எஸ் இஸ்மாயில் (மர்உறம்) தனிப்பட்ட முறையில் இதற்கு ஊக்கமளித்து வந்துள்ளார்.

1935 இல் இருந்தே ஒரு ஒருங்கமைப்பின் கீழ் இது விழாவாகக் கொண்டாடப்படத் தொடங்கியது. மீலாத் தினம் ஒரு மக்களிய்க்கமாக பரிணமித்த ஆண்டாக இதனைக் கூறலாம். காயல் பட்டணத்தைச் சேர்ந்த வணிகர் அபூபக்கர் என்பார்

சில ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். இது சம்பந்தமான முதலாவது கூட்டம் உற மீது உறைஸன் மரைக்கார் வீட்டில் நடைபெற்றுள்ளது.

புத்தள நகரச் செல்வந்தர்களுக்கும் பிரமுகர்களுக்கும் மத்தியில் நீண்டகாலமாக நிலவிவந்த வேற்றுமை மீலாத் விழா குழுவை அமைக்க எடுத்த நடவடிக்கைகளின் மூலமே முதன் முறையாகத் தீர்த்துவைக்கப்பட்டது. என மீலாத் ஷரீப் சொசைட்டி ஸ்தாபக அங்கத்தவர்களின் ஒருவரான பி.எம். மஉற்மூது  அவர்கள் குறிப்பிடுகிறார். மீலாத் விழாவின் மூலம் ஏற்பட்ட இந்த ஒற்றுமையே புத்தளத்திற்கு நீண்ட காலத் தேவையாக இருந்த புத்தளம் முகிதீன் ஜூம்மாப் பள்ளியைக் கட்டுவதற்குரிய ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. பி.எம். மற்முது  அவர்கள் அதை பின்வருமாறு எடுத்துரைத்தார்கள். “அல்லாஹ்வின் கிருபையினாலும் ரசூலுல்லாவின் பரக்கத்தினாலும் மீலாத் ஷரீப் காரணமாக ஏற்பட்ட ஒற்றுமையாலேயே பெரிய பள்ளி கட்டப்பட்டதென என் கல்புக்கு படுகிறது. ஆரம்பகால மீலாத்விழாவைக் கொண்டாடுவதில் ஊரில் எல்லா செல்வந்தர்களும், பிரமுகர்களும் ஓரணி திரண்டுள்ளனர் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

புத்தளம் முஸ்லிம் அபிவிருத்தி சங்கம்

புத்தளத்தின் வர்த்தமான வரலாற்றை எழுத முன்வரும் எவரும் கவனத்திற் கொள்ள வேண்டிய சங்கம் முஸ்லிம் அபிவிருத்தி சங்கமாகும். முற்போக்கான எண்ணங்கொண்டோரினால் 1930 களில் உருவான இச்சங்கமே 1/4 நூற்றாண்டாகப் புத்தளத்தின் பல்வேறு சமூக அபிவிருத்தி, கல்வி வளர்ச்சி நடவடிக்கைகளின் உந்து சக்தியாகவும் செயல்படும் ஸ்தாபனமாகவும் இயங்கி வந்துள்ளது.  “ஊக்கமதைக்கைவிடேல்” என்ற தமிழ் மூதுரையைத் தாரக மந்திரமாகக் கொண்டு பயனுள்ள பணிகள் செய்த இச்சங்கத்தினரே மீலாத் விழாவையும் ஊக்குவித்து வந்ததோடு சமூகத்திற்குப் பயன் தரும் வகையில் அது பயணப்பட வழிவகைகளையும் அமைத்துக் கொடுத்தனர்.

ஆரம்ப காலத்தில் மீலாத் விழா கொண்டாட்டங்கள் வண்ணக்கடதாசிகளாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டும் மக்கள் பைத்துக்கள் ஓதி ஊர்வலமாக வந்தும் ஆங்காங்கே பானங்களும் பண்டங்களும் மக்களுக்கு வழங்கியும் நடைப்பெற்றுவந்துள்ளன. ” இதன் மூலம் சமூக மக்களை ஒன்று திரட்ட முடிந்தது ” என என். அப்பாஸ் மரைக்கார் கூறுகிறார்.

மீலாத் பிரசுரங்கள்

1930 களில் தமிழ் நாட்டில் மீலாத் ஷரீபை முன்னிட்டு சிறு பிரசுரங்கள் புத்தளத்தில் மீலாத் ஷரீப் தினங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில வருமாறு,

  1. சற்குன நபி . மௌலவி அஉற்மத் ஸயீத் சாஉறிப் (ஆசிரியர் – ஸைபுல் அஸ்லாம் ) 1936.
  2. ஜனநாயக ஆட்சி ஸ்தாபகர். அதே ஆசிரியர் 1937
  3. இஸ்லாமிய இறுதி நபியின் இணையில்லாத வெற்றி . என். எம்.ஏ. றஊப் அலிய்யா மாணவ பிரசுரம் (கொழும்பு ) புத்தளம் எம். எம். எச் உறா மீது உஸைன் கம்பனியால் விநியோகிக்கப்பட்டது.1936
  4. நன்னபிகள் கோமன். எஸ். புருஉறானுதீன் அடியபக்க மங்கலம் 1933.
  5. திருவருள் தூது மௌலானா முஉறம்மது உறபீப்ற்றஉற்மான்கான் ஷாகிப் ஷெர்வானி (சென்னை ) புத்தளம் மு.நா.க.உறமீது சூசைன் மரைக்காரினால் விநியோகிக்கப்பட்டது.உறிஜ் 1352 (ஜே. அப்பாஸ்)

மௌலவி அஉற்மத் ஸயீத் சாகிபுடைய இரண்டு நூல்களையும் கல்பிட்டி நா.அப்துல் அஜிஸ் விநியோகித்துள்ளதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர சிறு பிரசுரங்களும் பு.மீ.ஷ. சொசைட்டியின் ஆதரவில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.1949 மீலாத் விழாவுக்கான “எழுச்சி மலர்” வெளியிடப்பட்டதாக தகவல்கள் 1949 இல் மீலாத் விழாவுக்கான ” எழுச்சி மலர்” வெளியிடப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன. புத்தளம் அபிவிருத்தி சங்க ஆயுட்காலக் காரியதரிசி நெ.அப்பாஸ் மரைக்காரின் முயற்சியாலும் பொருளுதவியலும், அச்சிட்டு விநியோகிக்கப்பட்டதாக “எழுச்சி மலர்” கையெழுத்துப் மூலப்பிரதி கூறுகிறது. அம்மலரின் முகவுரையில் நெ.அப்பாஸ் மரைக்கார் பின்வருமாறு எழுதியுள்ளார்.”……… உயர் ஞான குருவாம் சத்திய வேத நபி முஉறம்மது முஸ்தபா ரஸூல் (ஸல் ) அவர்களின் ஜனனத்தினம் …….”

ஆதலின் இத்தினத்தை முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொருவரும் சிறப்பாகக் கொண்டாடும் கடமை வாய்ந்தவர்களாக இருக்கின்றோம். இப்புனித தினத்தில் அவர்களின் குணாதிசயங்களையும் அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய நல்லுபதேசங்களையும் கிரியாம்சத்தில் செய்து காட்டிய நடை உடை பாவனை நற்செயல்களையும் நம்மால் இயன்ற அளவில் வாசித்தும் கேட்டும் உணரக்கூடிய வழிவகைகளைச் செய்வித்த முஸ்லிம்களாகிய நாமனைவரும் கடமைப்பட்டுள்ளோம்”.

இம்மலரின் ஏ.எம். உறனிபா (உலகோரை உய்விக்க வந்த உத்தமர்) என்.டி.அப்துல் கபூர் நூரி (மீலாத் ஷரீபும் இஸ்லாமும்) எம்.ஜே.எம். சம்சுதீன் (தற்காலக் கல்வியும் மார்க்கமும்) முதலியோர் எழுதியுள்ளனர்.

1935 ம் ஆண்டுவரை பாத்திமா கல்லூரி வளவிலும் 1935 லிருந்து தற்போதைய மீலாத் மைதானத்திலும் மீலாத் நடைப்பெற்றுவந்துள்ளது.மீலாத் மைதானத்திலுள்ள மீலாத் மேடை 1935 ல் கட்டப்பட்டதாகும்.

பேச்சாளர்

அறிஞர்களையும் உலமாக்களையும் கொண்ட பிரச்சாரக் கூட்டமே மீலாதீன் உச்ச கட்டமாகும். றவூப் பாஷா எம்.ஜெ.கலீலுர் ரஉற்மான் (மணிமொழி மௌலானா) காமா உறஸரத் போன்றோர் ஆரம்ப காலங்களில் உரையாற்றியுள்ளார். 1960 கு பின் மசூத் ஆலிம், மௌலவி யு.எம்.தாஸிம் எம்.ஏ.கலாநிதி.சுக்ரி, எம்.எச்.எம்.அஷ்ரப், தினப் கரன் கியாஸ், அன்பு முகையதீன், ஈழமேகம்பக்கீர்த்தம்பி எம்.எம்.பீர் முகம்மது எம். எல்.ஏ. (தமிழ் நாடு ) செய்யது முஉறம்மது மிஸ்பாஉறி, ( தமிழ் நாடு ) மௌலவி கே.எம். எச்.காலிதீன், கலாநிதி எம். எம். உவைஸ் முதலியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இளைய தலைமுறை பேச்சாளர் சுதந்திரமாக தம் கருத்தினை முன்வைக்கவும் தேசிய சர்வதேச முஸ்லீம் விவகாரங்களை எளிமையாக மக்களுக்கு எடுத்துரைக்கவும் மீலாத் மேடை அண்மைக்காலமாகப் பயன்பட்டுவருகிறது.

1970 ம் ஆண்டுக்குப்பின் கட்டுரை, பேச்சு, விவாதத் தலைப்புக்கள் சமூக கல்விப் பிரச்சினைகளைத் தழுவியதாகவும் சர்வதேச முஸ்லிம் பிரச்சினைகளைக் கொண்டதாகவும் அமைந்து வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.மிக அண்மைக்காலமாக இதில் மேலும் வளர்ச்சியைக் காணக்கூடியதாக உள்ளது. செர்.ராஸிக் பரீத்  பதியுதீன் மஉற்மூத் முதலியோரின் தொண்டுகள் பற்றியும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலை பற்றியும் மஸ்ஜிதுகளின் மறுமலர்ச்சி பற்றியும் அமையும் தலைப்புக்கள் முஸ்லிம் சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளில் மாணவரினதும் கவனத்தை திருப்ப உதவக்கூடியன.

மேலும் மீலாத் குழு முஸ்லிம்களின் கலாச்சார பாரம்பரியங்களை முஸ்லிம்களுக்கு எடுத்துக் கூறவும் அவற்றை சேகரிக்கவும் பிரசுரிக்கவும் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு தூதுவர்

அல்உறாஜ் எம்.எச்.எம் நெய்னா மரைக்கார் தொடர்ந்து தலைவராயிருந்த 8 வருடங்களில் பல வெளிநாட்டு தூதுவர்கள் மீலாத் மேடையில் தோன்றினர். பாகிஸ்தான், இந்தோனேஷியா, இந்தியா,எகிப்து முதலிய நாடுகள் இதில் அடங்கும்.

நன்கொடை

1967 அறபு- இஸ்ரேல் யுத்தம் நடைபெற்றபோது அறபு மக்களுக்கான நிதி வழங்குவதில் மீலாதும் பங்கு கொண்டது. புத்தள முன்னேற்ற உறுப்பினர்கள் திரட்டிய 11620.31 சதம் அல் உராஜ்களான ஏ.எம்.அலிமரைக்காரினாலும் எச்.எஸ். இஸ்மாயிலினாலும் எகிப்து தூதுவராலயப் பிரதிநிதி அப்துல் உறலீம் முஉறம்மது எல்சிகால் வசம் ஒப்படைக்கப்பட்டது.

வீடு எரிந்து நஷ்டப்பட்டவருக்கும் ஏழைகளின் திருமனத்திற்கும் சிறு நன் கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.6 ம் வகுப்பு மாணவர் சிலருக்கு புலமைப் பரிசில் வழங்கியமையும் இதில் அடங்கும்.

போட்டி நிகழ்ச்சிகள்

கிறாஅத், பேச்சு, கீதம் முதலிய போட்டிகள் அறிமுகமாயின.பாடசாலை மாணவ மாணவியர் பயிற்சி பெரும் சிறந்த கலமாக மீலாத் அமையத் தொடங்கியது. புத்தள நகரம் மட்டுமன்றி புத்தளப் பிரதேச பாடசாலைகள் பலவும் இதில் பங்கு கொண்டு பாடசாலைகளின் தரத்தை மேலும் மிளிரச் செய்ய மீலாத் தகுந்த சாதனமாகப் பயன்பட்டது.

உறதீஸ் மனனம், அறபு எழுத்தாணி, கட்டுரை, உரையாடல், இஸ்லாமியக் கதை, கவிதை, விவாதம், சிறுகதை முதலிய போட்டி நிகழ்ச்சிகள் புதிதாக அறிமுகமாயின. நூற்றுக்கும் அதிகமான மாணவர் வருடா வருடம் இஸ்லாமிய இலட்சியங்களின் வழி தமது பேச்சாற்றலையும்,  எழுத்தாற்றலையும், பாடும் திறனையும் வெளிக்கொணர இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைந்தது.

தங்கப் பதக்கங்களும்,வெள்ளிக் கேடயங்களும் கோப்பைகளும், விலைமதிப்பற்ற நூல்களும் பரிசாக வழங்கப்பட்டு மாணவர் திறமைகள் கௌரவிக்கப்பட்டு வந்துள்ளன.

1975 வரை மீலாத் சொசைட்டியின் அங்கத்தினர் சிலரையேனும் இங்கு நினைவு கூறுவது பொருத்தமானதாகும்.

H.H. அமானுல்லாஹ்

T.S. ஆப்தீன்

A.K. ஜெகுபர்

C.S. ஹுசைன்

N.T. அப்துல் ஒபூர்

K.M.O. ஜெகுபர்

A.M.C. புகாரி

A.N.M. ஷாஜஹான்

K. அபுசாலிகு

H.M.A. வதூத்

L.T. நெய்னா மரைக்கார்

H.H அபூபைதா

T.S ஷாகுல் ஹமீது

H.M.M. அனஸ்

A.R.M புவாத்

M.I.A. லத்தீப்

A.M.M. ஷஹீத்

A.A.S. முஹம்மது

M.I.M. மஃபூப் மரைக்கார்

S.M. மலிக்

K.V.L.A. ஹமீத் மரைக்கார்

M.A.M. ஷாபி

M.M.A. ஜப்பார்

E.A.M. சதகதுல்லாஹ்

H.H. ஹுசைன்

N.M. கமாதீன்

M.I. அபுசாலிகு

H.A.L. சுபைர்

K. அபுதாஹிர்

R.N.M.L.M. நிசார்

தொகுப்பும் தகவலும் : Y.M.G.A. கலாசாரப் பிரிவு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All