Puttalam Online
sports

புத்தளம் மதீனா நகர் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

  • 18 September 2017
  • 433 views

ரூஸி சனூன்  புத்தளம்        
புத்தளம் மன்னார் வீதி இரண்டாம் மைல் கல் மதீனா நகர் மீள் குடியேற்ற கிராமத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் பூவரசங்குளம் அல் பஹா கரப்பந்தாட்ட அணி சம்பியனாக தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடரில் இரண்டாம் இடத்தினை மன்னார் கொண்டச்சி ஹமீதியா பீ அணி பெற்றுக்கொண்டுள்ளது.
மதீனா நகர் மீள் குடியேற்ற கிராமத்தின் மதீனா விளையாட்டு கழகம் நடாத்திய இந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர் ஞாயிற்றுக்கிழமை (17) முழு நாளும் மதீனா நகர் கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
அணிக்கு தலா நான்கு பேர்களை கொண்ட இந்த போட்டி தொடரில் நாடளாவிய ரீதியாக 40 க்கும் மேற்பட்ட கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டன.
சம்பியனாகிய பூவரசங்குளம் அல் பஹா கரப்பந்தாட்ட அணிக்கு 30 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும், இரண்டாம் இடம் பெற்ற கொண்டச்சி ஹமீதியா பீ அணிக்கு 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டதோடு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இணைப்பு செயலாளர் முஜாஹிர் கலந்து கொண்டு ரொக்கப்பணத்தையும் வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.
போட்டிக்கு நடுவர்களாக ஏ.எச். உமர் பாச்சா மற்றும் ஆசிரியர் இபாதுல்லாஹ் ஆகியோர் கடமையாற்றினர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All