Puttalam Online
social

உத்வேகம் பெற்றுவரும் குப்பைப் போராட்டம்…!

  • 21 September 2017
  • 1,036 views

கொழும்பு மீதொட்டமுல்லை குப்பை மலையினை புத்தளம் அருவக்காட்டுப் பகுதியில் கொட்டுகின்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கெதிரான மக்கள் போராட்டம் பல்வேறு அமைப்புக்களினால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த வேலையில், கடந்த 2017.09.13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போராட்டத்தை முன்னெடுத்துவரும் ஏற்பாட்டாளர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் தேசியரீதியில் இப்போராட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் பல்வேறுமட்டங்களில் கலந்துரையாடல்களை நடத்தி ஆலோசனைகளையும் பெற்றுவருகின்றனர்.

இந்தவகையில் பிரபல தொழிலதிபரும் தனவந்தருமான றொஹான் பெலவத்த  அவர்களை முபாரக் ஆசிரியர் மற்றும் முஸம்மில்  ஹாஜியார் உள்ளடங்களான குழுவினர்  இன்று பியகமையிலுள்ள அவரது அலுவலகத்தில்  சந்தித்த போது, குறித்த போராட்டத்திற்கு தான் முழுமையான பங்களிப்பினை வழங்குவதாகவும் பிரபல சட்டத்தரணிகள் மற்றும் சூழலியலாளர்களின் ஆலோசனைகளை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

றொஹான் பெலவத்தை என்பவர் பிரபல கோடீஸ்வரர் என்பதுடன் தான் இலங்கையின் ஜனாதிபதியானால் ஒரே நாளில் இந்நாட்டின் கடன்கள் அத்தனையையும் செலுத்திவிடுவதாக ஊடகங்களினூடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All