Puttalam Online
regional-news

புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணி வெற்றி

  • 26 September 2017
  • 493 views

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் கால்பந்தாட்ட லீக் புத்தளம் நகரில் தொடராக நடாத்தி வரும் ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் போட்டி ஒன்றில் புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் அதி கூடிய புள்ளிகளோடு காணப்படும் நியூ ஸ்டார்ஸ் அணி, இந்த தொடரில் எந்த வித புள்ளிகளையும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்ற போல்டன் அணியினை இப்போட்டியில் எதிர்கொண்டு 02 : 00 கோல்களினால் வெற்றி கண்டுள்ளது.
இந்த போட்டியானது புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் (23) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த போட்டியில் போல்டன் அணிக்கு அதிகமான கோல்களை புகுத்தலாம் எனற எண்ணக்கனவோடு வந்த நியூ ஸ்டார்ஸ் அணிக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. இதற்கு காரணம் போல்டன் அணியின் பின்வரிசை இந்த போட்டியில் பலமாக அமைக்கப்பட்டிருந்தது.
போல்டன் அணியின் முன் வரிசை வீரர்களின் முழுமைப்படுத்தப்படாமை மற்றும் அந்த அணியின் வீரர் ஒருவர் இரட்டை மஞ்சள் அட்டையுடன் கூடிய சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமை ஆகியன போல்டன் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இந்த போட்டியில் நியூ ஸ்டார்ஸ் அணி வெற்றிகொண்டதன் மூலம் அவ் அணி 03 புள்ளிகளை பெற்று மொத்தமாக 12 புள்ளிகளுக்கு முன்னேறியுள்ளது.
போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.எஸ்.எம். நௌபி, எம்.ஓ.எம். ஜாக்கீர் ஆகியோர் கடமையாற்றினர்.
இந்த ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இதுவரையிலும் நடைபெற்ற போட்டிகளின் பிரகாரம் நியூ ஸ்டார்ஸ், யுனைட்டட், லிவர்பூல், விம்பிள்டன் ஆகிய நான்கு அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் சமநிலையில் காணப்படுகின்றன. முதல் சுற்று புள்ளிகள் அடிப்படையிலும் இரண்டாம் சுற்று விலகல் அடிப்படையிலும் நடைபெறும் இந்த தொடரில் விலகல் சுற்றுக்கு இந்த நான்கு அணிகளும் தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் நிலவுகின்றன.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All