Puttalam Online
sports

வீதி கால்பந்தாட்ட போட்டி தொடர்

  • 27 September 2017
  • 482 views

ரூஸி சனூன்  புத்தளம்
புத்தளம் வான் வீதியில் இயங்கும் எச்.ஈ.சி. கல்வி நிறுவனம் நடாத்திய அணிக்கு நான்கு பேர்களை கொண்ட வீதி கால்பந்தாட்ட போட்டி தொடர் அண்மையில் (23) புத்தளம் நெடுங்குளத்துக்கு அருகாமையில் உள்ள வீதியில் இடம்பெற்றது.
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியரும், எச்.ஈ.சி. கல்வி நிறுவன பணிப்பாளருமான எம்.எப்.எம். ஹுமாயூன் புத்தளத்தில் இந்த வீதி கால்பந்தாட்ட போட்டிதனை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த போட்டி தொடரினை ஏற்பாடு செய்திருந்தார்.
மேற்படி கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் தரம் 06 தொடக்கம் தரம் 08 வரைக்குமான மாணவர்களை உள்ளடக்கிய 22 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்றன.
தரம் 06 க்கான போட்டியில் சம்பியனாக ரெட் ரேஞ்சர்ஸ் அணியும் இரண்டாம் இடத்தினை ஜேனல் அணியும் பெற்றுக்கொண்டன.
தரம் 07 க்கான போட்டியில் சம்பியனாக சஹீரியன்ஸ் டீம் போய்ஸ் அணியும், இரண்டாம் இடத்தினை லுமினஸ் அணியும் பெற்றுக்கொண்டன.
தரம் 08 க்கான போட்டியில் சம்பியனாக ரியல் சஹீரியன்ஸ் லயன்ஸ் அணியும், இரண்டாம் இடத்தினை சஹீரியன்ஸ் யங்ஸ் அணியும் பெற்றுக்கொண்டன.
தரம் 06 இன் சிறந்த ஆட்டக்காரராக சீய்யார் சௌக்கதும்,  தரம் 07 இன் சிறந்த ஆட்டக்காரராக நவீதும், தரம் 08 இன் சிறந்த ஆட்டக்காரராக மிக்தாம் சரீக்கும் தெரிவாகினர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்ளும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு மேலங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All