Puttalam Online
regional-news

பிராந்திய சம்பியனாக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி தெரிவு

  • 1 October 2017
  • 469 views

ரூஸி சனூன்  புத்தளம்

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான டிவிஷன் 2 கால்பந்தாட்ட போட்டி தொடரில் பிராந்திய சம்பியனாக புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி தெரிவாகியுள்ளது.
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணிக்கான இரண்டாவது போட்டியில் குருநாகல் வயம்ப றோயல் கல்லூரி அணியினை 08 : 00 கோல்களினால் அதிரடியாக வெற்றி கொண்டதன் மூலம் “கோ ஸாஹிரா கோ” எனும் கோஷத்தோடு ஸாஹிரா அணியானது இந்த சம்பியன் தகுதியினை அடைந்துள்ளது.
இந்த இரண்டாவது போட்டியானது வெள்ளிக்கிழமை (29) காலை குருநாகல் வெஹர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஸாஹிரா அணி இடைவேளைக்கு முன்பாக 04 கோல்களையும், இடைவேளைக்கு பின்னர் 04 கோல்களையும் பெற்று மொத்தமாக 08 கோல்களினால் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்குமே தலா ஒவ்வொரு தண்ட உதைகள் கிடைக்கப்பெற்றபோதும் அது கோலாக்கப்படவில்லை. எனினும் பந்தின் முற்று முழுதான ஆதிக்கம் ஸாஹிரா பக்கமே இருந்தது.
ஸாஹிரா அணிக்காக அவ் அணியின் அதி கூடிய கோல்களை செலுத்தி சாதனை நிலைநாட்டி இருக்கின்ற அதி சிறந்த முன் கள வீரர் எம். முசக்கீர் இந்த போட்டியிலும் 05 கோல்களை புகுத்தி அசத்தியதோடு எம். சமீர் 02  கோல்களையும், எம்.எஸ்.எம். ஸகீப் 01 கோலினையும் புகுத்தினர்.
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி, குருநாகல் மலியதேவா கல்லூரி மற்றும் குருநாகல் வயம்ப றோயல் கல்லூரி ஆகிய அணிகள் 03 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டி தொடரில், குருநாகல் மலியதேவா கல்லூரி அணியினை கடந்த வாரம் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 04 : 00 கோல்களினால் வெற்றி கண்டிருந்தது.
பிராந்திய சம்பியனாக தகுதி பெற்றுள்ள புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி அடுத்து வரும் 16 பிராந்திய சம்பியன் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.
புத்தளம் ஸாஹிரா அணியினை பாடசாலைகள் கால்பந்தாட்ட தேசிய அணியின் பயிற்றுவிப்பாளரும், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளன பொருளாளருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத், உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூன், அதிபர் எஸ்.ஏ.சி. யாக்கூப் ஆகியோர் வழி நடாத்தி இருந்தனர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All